ஐஎஸ் அமைப்பின் முக்கிய பொறுப்புகளை தனது சகாவிடம் கையளித்தாரா அல் பக்தாதி?

Published By: Rajeeban

23 Aug, 2019 | 05:43 PM
image

ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி காயமடைந்துள்ளார் எனவும் இதன் காரணமாக அவர் அமைப்பின் தலைமைப்பொறுப்பை  முன்னாள் ஈராக் ஜனாதிபதி சதாம் ஹ_சைனின் இரணுவத்தை சேர்ந்த  அப்துல்லா குர்தாஸ் என்பவரிடம் கையளித்துள்ளார் எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தலைமறைவாகயிருந்து ஐஎஸ் அமைப்பினை மீண்டும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பக்தாதி  ஐஎஸ் அமைப்பை மீண்டும் கட்டியெழுப்பும் பொறுப்பை அப்துல்லா குர்தாஸ் என்பவரிடம் ஒப்படைத்துள்ளார் என ஐஎஸ் அமைப்பின் ஊடகமான அமாக் தெரிவித்துள்ளது.

ஐஎஸ் அமைப்பின் தலைவர் தனது அதிகாரங்களை வேறு ஒருவரிடம் ஒப்படைத்துள்ளமை அவர் 2017 இல் இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்துள்ளார் என்ற சந்தேகங்களை அதிகரித்துள்ளது என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 அப்துல்லா குர்தாஸ் சதாம் ஹ{சைனின் இராணுவத்தில் பணியாற்றியவர் எனவும் 2003 இல் பஸ்ராவில் இவரும் அல்பக்தாதியும் அமெரிக்க படையினரால் தடுத்துவைக்கப்பட்டிருந்தவேளை இவர் பக்தாதிக்கு நெருக்கமானவராக மாறினார் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பஸ்ராவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வேளையே அல்பக்தாதி அங்கிருந்த பலரை தீவிரவாதிகளாக மாற்றினார் எனவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதன் பின்னர் அப்துல்லா குர்தாஸ் ஐஎஸ் அமைப்பி;ன் தலைவருக்கு நெருக்கமானவராக மாறினார் என தெரிவித்துள்ள சர்வதேச ஊடகங்கள் பேராசிரியர் என அழைக்கப்படும் இந்த நபர் அமைப்பின் ஈவிரக்கமற்ற கொள்கை வகுப்பாளர் எனவும் தெரிவித்துள்ளன.

ஐஎஸ் அமைப்பின் பிரதிதலைவராகயிருந்து 2016 இல் அமெரிக்காவின் ஹெலிக்கொப்டர் தாக்குதலில் கொல்லப்பட்ட அபு அல் அப்ரியின் நெருக்கமான சகாவாகவும் அப்துல்லா குர்தாஸ் காணப்பட்டார் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சிரியா மற்றும் ஈராக்கிலிருந்து அகற்றப்பட்டுள்ள ஐஎஸ் அமைப்பை மீள கட்டியெழுப்புவதற்காக அல் பக்தாதி அப்துல்லா குர்தாஸை  தெரிவு செய்துள்ளார் என ஐஎஸ் விவகாரத்தில் நிபுணத்துவம் பெற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை அல்பக்தாதி தனது பதவியை விட்டுக்கொடுக்கவில்லை விநியோகம் மற்றும் நடமாட்ட விவகாரங்களிற்கு பொறுப்பாக அப்துல்லா குர்தாஸினை அவர் நியமித்துள்ளார் என பாதுகாப்பு நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த நியமனத்திற்கு மூன்று காரணங்கள் இருக்கலாம் அமைப்பின் பலவீனங்களை கண்டறிவதற்காக  பக்தாதி  அப்துல்லா குர்தாஸினை நியமித்திருக்கலாம் ,எதிர்காலத்தில் அவரை தலைவராக மாற்றும் திட்டத்துடனும் இந்த நியமனத்தை அல்பக்தாதி மேற்கொண்டிருக்கலாம் என பாதுகாப்பு நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 11:11:08
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10
news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21