நாட்டின் முன்­னணி தகவல் தொடர்பு தொழி­னுட்ப தீர்­வுகள் வழங்­கு­ன­ரான ஸ்ரீலங்கா ரெலிகொம் (ஸ்ரீலரெ), அண்­மையில் முத­லீட்­டுச்­ச­பையின் அங்­கீ­காரம் பெற்ற SMI Property Developers (Pvt) Ltd உடன் ஒரு உடன்­ப­டிக்­கையை மேற்­கொண்­டி­ருந்­தது. அதன்­படி, இந்த கட்­டிட நிறு­வனம் நிர்­மா­ணித்­து­வரும் 27 மாடி­களைக் கொண்ட பிர­மாண்­ட­மான சொகுசு தொடர்­மா­டி­யான Orwell Residency இற்கு ஸ்ரீலங்கா ரெலிகொம் தொலைத்­தொ­டர்பு இணைப்­பு­களை வழங்­கு­வ­தென தீர்­மா­னிக்­கப்­பட்­டது. தற்­ச­மயம் கொழும்பின் மையப்­ப­கு­தி­யான டீல் பிளேஸில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டு­வரும் இந்த தொடர்­மா­டித்­தொ­கு­தியின் கட்­டிட நிர்­மாணம் 2017 மே மாத­ம­ளவில் முடி­வ­டையும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

இக்­கட்­டிட நிர்­மாணம் நிறை­வ­டைந்­ததும், அது முழு­மை­யாக இழை ஒளியால் (fiber optic) இணைக்­கப்­பட்டு, அதன் ஒவ்­வொரு குடி­யி­ருப்­பா­ள­ருக்கும் ‘ஸ்மார்ட்லைன்’ மூல­மாக, 100Mbps அதி­வேக அகன்ற அலை­வ­ரி­சை­யான ‘Fiber – To –The –Home (FTTH) இணைப்பு வழங்­கப்­படும். இது முழு­மை­யான fiber optic உயர்­மாடி கட்­டி­ட­மா­க­வி­ருக்கும். இத்­தொ­டர்­மா­டித்­தொ­கு­தி­யி­லுள்ள 64 பகட்­டான வீடு­களின் குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்கு ஸ்ரீலரெ FTTH Smartline Triple play சேவை­க­ளுடன் PABX முறை­யி­ல­மைக்­கப்­பட்ட உள்­ளக தொடர்பு சேவையும் வழங்­கப்­ப­ட­வுள்­ளது. அத்­துடன், ஒரு நிர்­வ­கிக்­கப்­பட்ட தொலைக்­காட்சி முறை (managed tv – MATV) மூல­மாக இதன் குடி­யி­ருப்­பா­ளர்கள் தத்­த­மது தேவைகள், விருப்­பங்­களைப் பொறுத்து, சனல்­களை தெரி­வு­செய்யும் வச­தியும் இதில் வழங்­கப்­பட்­டுள்­ளது.

இந்த உடன்­ப­டிக்கை பற்றி குறிப்­பிட்ட ஸ்ரீலரெ மெட்றோ, பிராந்­தியம் 2 இன் விற்­பனை பொது முகா­மை­யா­ள­ரான எஸ் எஸ். ஜய­சிங்க, “இந்த பாரிய செயற்­றிட்­டத்தில் SMI Property Developers உடன் நாம் இணைந்­தி­ருப்­பது பெரு­மைக்­கு­ரி­யது. ஸ்ரீல.ரெ எப்­போ­துமே மக்­களின் வாழ்க்­கை­மு­றையை மாற்­று­வ­தற்­காக தன்னை அர்ப்­ப­ணித்து வந்­தி­ருக்­கி­றது. அதன்­படி, இந்த உடன்­ப­டிக்கை மூல­மா­கவும், உல­கத்­த­ர­மான தகவல் தொடர்பு தொழி­னுட்ப சேவை­களை இலங்­கையில் வசிக்கும் மக்­க­ளுக்கு வழங்கும் மேலு­மொரு வாய்ப்­பினை ஏற்­ப­டுத்தித் தந்­துள்­ளது” என்றார்.