“புதிய இராணுவத் தளபதியின் நியமனம் நல்லிணக்கத்தின் மீது தமிழ் மக்களின் நம்பிக்கையை தகர்த்துள்ளது”

Published By: Digital Desk 4

22 Aug, 2019 | 07:21 PM
image

புதிய இராணுவத்தளபதியின் நியமனம்  நல்லிணக்கத்தின் மீது தமிழ் மக்களின் நம்பிக்கையை தகர்த்துள்ளது.  என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு சந்திரகுமார்  பிரித்தானிய உயர்ஸ்தானிகராலய முதன்மை செயலாளரிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கை்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் முதன்மை செயலாளரும், அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான  ஆலோசகருமான அமி ஓ பிரின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவருமான மு. சந்திரகுமாரை அவரது கிளிநொச்சி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இன்றைய தினம் 22 காலை 11.00 மணிக்கு இடம்பெற்ற இச் சந்திப்பில்   இலங்கையின் நல்லிணக்கச் செயற்பாடுகளின்  நிலைமைகள், ஜனாதிபதி தேர்தல் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.

இலங்கையில் தற்போது நல்லிணக்கச் செயற்பாடுகளில்  தமிழ் மக்கள் நம்பிக்கையிழந்து காணப்படுகின்றனர். குறிப்பாக நல்லாட்சி அரசின் காலத்தில் தமிழர்களின் தொல்லியல் பிரதேசங்கள் உட்பட பல இடங்களின் ஆக்கிரமிப்புக்கள் அதிகமாக இடம்பெறுகின்றமை, என்பன நல்லிணக்கச் செயற்பாடுகளை கேள்விக்குட்படுத்துகிறது எனத்தான் சுட்டிக்காட்டியதாக தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்.

 காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் விருப்பத்திற்கு மாறாக   காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகம்  உருவாக்கப்பட்டமை மற்றும் அதன் பிராந்திய அலுவலகங்கள் திறக்கப்படுகின்றமை, அவர்களுக்கான நீதியான தீர்வுகள் காணப்படாமை பற்றியும், குறித்த அலுவலகத்தின் மூலம் இதுவரை ஆரோக்கியமான எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என்ற விடயம்  என்பன நல்லிணக்கத்தின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தியருக்கிறது.

இதனை தவிர புதிய இராணுவத்தளபதியின் நியமனமும் நல்லிணக்கத்தின் மீது தமிழ் மக்களின் நம்பிக்கையை  தகர்த்திருக்கிறது.

 இதனைத் தவிர கடந்த ஆட்சிக் காலத்தில் இலங்கை மீது இருந்த சர்வதேச அழுத்தம் தற்போது இல்லை எனவும்  இலங்கை மீதான சர்வதேச விசாரணையை மேற்கொள்ளும்  வகையில்  பெயர் குறிப்பிட்டு நீதிபதிகளை நியமிக்கும் அளவுக்கு காணப்பட்ட  சர்வதேச அழுத்தம் தற்போது இல்லை என்றும் தான் சுட்டிக்காட்டியதாக தெரிவித்த அவர்

ஜனாதிபதி  தேர்தலில்  தொடர்பில் தமிழ் மக்கள் இரண்டு தரப்பினர்கள் மீது நம்பிக்கை இழந்தே காணப்படுகின்றனர். எனவே  இச் சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களின் வாக்குகள் பற்றி எதனையும் கூற முடியாது என்றும் தெரிவித்ததாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33