இலங்கையில் ஊழலை முற்றாக ஒழிப்பேன் ; ஊழலுக்கு எதிரான சர்வதேச மகாநாட்டில் ஜனாதிபதி உரை(வீடியோ இணைப்பு)

Published By: Raam

13 May, 2016 | 10:56 AM
image

இலங்கையில் ஊழலை முற்றாக ஒழிப்பதே அரசாங்கத்தின் முக்கிய குறிக்கோளாகுமென ஊழலுக்கு எதிரான சர்வதேச மகாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

மேலும் அரசியல் முறைக்கேடுகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதற்கு ஊழலே முக்கிய பங்காக இலங்கையில் இருந்து வந்துள்ளது.

இதற்காக மக்கள் தமது வாக்குரிமையை ஜனநாயகம் என்ற ரீதியில் 2015 ஜனவரியில் நடந்த ஜனாதிபதி மற்றும் அதன் பின் நடந்த பாராளுமன்ற தேர்தல்களில் ஊழலுக்கு எதிராகவும் ஊழலில் ஈடுப்பட்ட அரசியல் தலைவர்களுக்கு எதிராகவும் பாவித்தமை ஊழலை இல்லாது ஒழிப்பதற்கே ஆகும்.

ஜனநாயகம், நல்லாட்சி மற்றும் பொது கொள்கை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு சட்ட விதி  என்ற கோட்பாடுகளை கொண்டே நானும் பிரதமரும் இணைந்து இந்த அரசாங்கத்தை உருவாக்கினோம்.

இதன் மூலம் எமது முக்கிய குறிக்கோளாக  நாட்டிலிருந்து ஊழலை இல்லாது ஒழிப்பதேயாகும்.

இதன் அடிப்படையில், எமது பணிகளை  முன்னெடுத்து வருகின்றோம்.

மேலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினை மாற்றியமைப்பதற்கான யோசனையை பாராளுமன்றத்தில் முன்வைத்து அமைச்சரவை அங்கீகாரம் பெற்றுள்ளோம்.

ஊழல்கள் தொடர்பில் ஜனாதிபதி தலமையிலான பாரிய ஊழல் மோசடி விசாரணை குழுவினை அமைத்து ஊழல்கள் மற்றும் இலஞ்சம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு  வருகின்றன.

பாரிய நிதிமோசடி ஆணைக்குழுவினையும் அமைத்து மிக முக்கிய நிதிமோசடிகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றோம். 

அவர்கள் தங்கள் பணியை சிறப்பாக செய்ய தேவையான அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போதைய ஆட்சியினை அமெரிக்கா லண்டன் சுவிஸ்லாந்து இந்தியா மற்றும் உலக வங்கியும் தங்களின் பாராட்டை வழங்கியதோடு தங்களின் பங்களிப்பையும் தருவதாக தெரிவித்துள்ளது.

இலங்கையை முற்றாக ஊழல் அற்ற நாடாக உருவாக்க அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் தலைமையில்,  லண்டன் நகரில் இடம்பெறகின்ற ஊழல் எதிர்ப்பு சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார்.

இம் மாநாட்டில் கருத்து தெரிவித்த பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன்,ஊழல் ஒழிப்புத் திட்டத்தினை நாங்கள் 3 முறையில் முன்னெடுக்கவுள்ளோம். 

ஊழலில் ஈடுபடுபவர்களை இனங்காணுதல், அவர்களுக்கான தண்டனை தொடர்பில் ஆராய்தல், ஊழல் அற்ற அரசாங்கம்,வியாபாரம் மற்றும் விளையாட்டு துறையினை உருவாக்குல் என்பனவே எமது குறிக்கோள்களாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31