பப்புவா சிறை சூறையாடல் - 250 கைதிகள் தப்பி ஓட்டம்

Published By: Daya

22 Aug, 2019 | 11:40 AM
image

இந்தோனேஷிய அரசுக்கு எதிரான போராட்டத்தில் பப்புவா சிறை சூறையாடலில்  250 கைதிகள் தப்பி ஓடியுள்ளதாக அந்நாட்டு ஊடகம் தகவலை வெளியிட்டுள்ளது. 

இந்தோனேஷியாவின் கிழக்கு பகுதியில் பப்புவா பிராந்தியம் அமைந்துள்ளது. முன்னர் டச்சு காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்து வந்த இந்த பிராந்தியம் 1963ஆம் ஆண்டு விடுதலை பெற்று தன்னை சுதந்திர நாடாக அறிவித்துக்கொண்டது. 

ஆனால்,  அண்டை நாடாக இருந்த இந்தோனேஷியா, எண்ணெய் மற்றும் தாதுக்கள் உள்ளிட்ட இயற்கை வளங்கள் மிகுந்த பப்புவா பிராந்தியத்தை தன்னோடு இணைத்துக்கொண்டது. அதே சமயம் பப்புவா பிராந்தியத்துக்கு இந்தோனேஷிய அரசு தன்னாட்சி அதிகாரத்தை வழங்கியது.

 

எனினும் பப்புவா பிராந்தியம் இணைக்கப்பட்ட நாள் முதலே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தனிநாடு கோரி பிரிவினைவாத அமைப்புகள் போராட தொடங்கின. அதன்படி பல ஆண்டுகளாக பப்புவா பிராந்தியத்தில் இந்தோனேஷிய அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இதனால் பப்புவா மற்றும் மேற்கு பப்புவா மாகாணங்கள் பதற்றம் நிறைந்த பகுதிகளாகவே இருந்து வருகின்றன. மேலும் அங்கு மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்வதாக இந்தோனேஷியா அரசு மீது குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த 17ஆம் திகதி இந்தோனேஷிய சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது மேற்கு பப்புவா மாகாணத்தில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் இந்தோனேஷிய தேசியக்கொடியை அவமதித்ததாக கூறப்படுகிறது.

இதில் தொடர்புடைய மாணவர்களை இந்தோனேஷிய பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது பப்புவா மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, அரசுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டம் வெடித்தது.

மேற்கு பப்புவா மாகாணத்தின் தலைநகர் மனோக்குவாரி, சோரோங், ஜெயபுரா உள்ளிட்ட நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது போராட்டக்காரர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையே பெரும் கலவரம் வெடித்தது. போராட்டக்காரர்கள் பாராளுமன்ற கட்டடத்துக்கு தீவைத்தனர்.

இந்த நிலையில், இந்த போராட்டத்தின்போது சோரோங் நகரில் உள்ள சிறையை போராட்டக்காரர்கள் சூறையாடினர். சிறைக்காவலர்களை மீறி உள்ளே நுழைந்த போராட்டக்காரர்கள் சிறை கட்டடத்துக்கு தீவைத்தனர்.

இதனால் சிறைக்குள் மிகவும் பதற்றமான சூழல் உருவானது. பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தண்ணீரை பீய்ச்சியடித்தும் போராட்டக்காரர்களை சிறையில் இருந்து விரட்டியடிக்க முற்பட்டனர். இதற்கிடையில் இந்த கலவரத்தை பயன்படுத்தி கைதிகள் சிறையில் இருந்து தப்பி ஓடினர். தடுக்க முயன்ற சிறைக்காவலர்களை கற்களை வீசியும், கூர்மையான ஆயுதங்களை கொண்டு தாக்கிவிட்டும் அவர்கள் தப்பி சென்றனர். இதில் சிறை அதிகாரிகள் உட்பட பலர் பலத்த காயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து இந்தோனேஷிய நீதித்துறை அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் மார்லியன் லாண்டே, “சிறையில் இருந்து 258 கைதிகள் தப்பிவிட்டனர். அவர்களில் 5 பேர் மட்டுமே மீண்டும் சிறைக்கு திரும்பினர்” என கூறினார்.

மக்கள் போராட்டத்தினால் ஏற்கெனவே பப்புவா பிராந்தியத்தில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றவழக்குகளில் கைது செய்யப்பட்ட 250-க்கும் மேற்பட்ட கைதிகள் சிறையில் இருந்து தப்பியிருப்பது பொலிஸாருக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளதாக சர்வதேச ஊடகம் தகவலை வெளியிட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52