பொலிஸ் அதிகாரி எனத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுவந்த சந்தேக நபர் கைது

Published By: Digital Desk 4

21 Aug, 2019 | 11:12 PM
image

=(செ.தேன்மொழி)

குளியாபிட்டி - கிரிவுள்ள பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படை உத்தியோகஸ்தர் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு போதைப்பொருள் கடத்தலில் ஈடுப்பட்ட 'எஸ்.டீ.எப்.விகீ" என்பவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிரிவுள்ள பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் இன்று புதன்கிழமை பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக கிரிவுள்ள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

குளியாபிட்டி பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய 'எஸ்.டீ.எப்.விகீ" எனப்படும் விக்ரமரத்ன என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து 50 ஆயிரம் மில்லி கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.

1995 ஆம் ஆண்டில் பொலிஸ் விசேட அதிரடிப்டையில் பணிபுரிந்துள்ள சந்தேக நபர் பின்னர் குற்றச்சாட்டின் காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் பல குற்றச் சம்பவங்கள் தொடர்பில் இவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் ஜா - எல பகுதியிலிருந்தே போதைப் பொருட்களை கொள்வனவு செய்து இவ்வாறு விநியோகத்தில் ஈடுப்பட்டுவந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மேலும் சந்தேக நபர் தனது பதவிகாலத்தில் வழங்கப்பட்ட அடையாள அட்டையை பயன்படுத்தி சிக்கலின்றி பல இடங்களுக்கும் சென்று போதைப் பொருள் கடத்தலில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.

பொலிஸார் சந்தேக நபரை குளியாபிட்டி நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய இதன்போது அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டதாகவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்க 20...

2024-03-19 12:43:19
news-image

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை...

2024-03-19 12:38:07
news-image

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற...

2024-03-19 12:11:22
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-19 12:09:35
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29
news-image

ஊதா நிற இலை வடிவ முகம்...

2024-03-19 10:39:58
news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32