கடந்த அரசாங்க காலத்தில் அரசியல் பழிவாங்களுக்கு  ஆளானவர்களுக்கு  நிவாரணம் வழங்க நடவடிக்கை - ரங்கே பண்டார

Published By: Digital Desk 4

21 Aug, 2019 | 10:35 PM
image

(நா.தினுஷா) 

கடந்த அரசாங்க காலத்தில் அரசியல் பழிவாங்கள்  நடவடிக்கைகளின் விளைவாக கொல்லப்பட்டவர்களுக்கும் அவற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர்  அரசியல்  பலிவாங்கல்களுக்கு ஆளாகிய சகலருக்கும் நிவாரணம் பெற்றுக்கொடுக்கப்படும் என்று பாராளுமன்ற உறு;பபினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார். 

அலரிமாளிகையில் இன்று புதன் கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது ;

1994 ஆம் ஆண்டுக்கு பின்னர்  ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்க்கு எதிராக அரசியல் பழிவாங்கல்கள் இடம்பெற்றிருந்தன. அதற்கமைய அரசியல் காரணங்களுக்காக ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள்  73 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 58 குடும்பங்களுக்கு நிவாரண தொகையை வழங்கியுள்ளோம். எஞ்சியுள்ள 15 குடும்பங்களுக்கு தேவையான நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்போம்.  

அதேபோன்று  275 பேர் பாரதூரமான தாக்குதல் சம்பவங்களினால் பாதிப்படைந்துள்ளனர்.  அவர்களில்  154 பேருக்கான நிவாரணங்கள்  வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இவர்களில் இன்னும் 94 பேருக்கு நிவாரணங்கள் வழங்க வேண்டியுள்ளது.  மேலும்  அரசியல் பழிவாங்கல்களினால் 1408 பேர் தமது சொத்துக்களை இழந்துள்ளனர். இவர்கள் தொடர்பான விசாரணைகளை முடிவடைந்தள்ள நிலையில் அவர்களுக்கான நிவாரணங்களை வழங்கவும் தீர்மானித்துள்ளோம்.  

இவர்களில் இதுவரையில் 351 பேருக்கு நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இன்னும் 1357 பேருக்கு நிவாரங்கள் வழங்கப்பட வேண்டியுள்ளது. செப்டம்பர் மாதம் மூன்றாம் திகதியாகும் போது விசாரணைகள் நிறைவடைந்துள்ளவர்களுக்கான நிவாரணங்களையும் , செப்டம்பர் 15 ஆம் திகதியாகும் போது அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்துள்ள ஆதரவாளர்கள் தொடர்பில் விசாரணைகளை செய்து  அவர்களக்கான நிவாரணத்தை வழங்கவும் மீள்குடியேற்ற அதிகார சபையும் அமைச்சும் தீரம்hனித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29
news-image

ஊதா நிற இலை வடிவ முகம்...

2024-03-19 10:22:17
news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32
news-image

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

2024-03-19 10:01:21
news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52