மன்னார் மாவட்ட வைத்தியசாலைகளின் குறைகளை நிவர்த்தி செய்யவேண்டும் ; ஷால்ஸ் நிர்மலநாதன் 

Published By: R. Kalaichelvan

21 Aug, 2019 | 06:21 PM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)

மன்னார் மாவட்டத்தில் வைத்தியசாலைகளில் காணப்படும் குறைகளை நிவர்த்திசெய்ய 5வருட திட்டத்தின் மூலம் பெளதீக வளங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன் மன்னார் மாவட்டவைத்தியசாலைக்கு பெற்றுக்கொள்ள இருக்கும் சீடீ ஸ்கேனை வைக்க பாதுகாப்பான இடம் அமைத்துத்ரவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் ஷால்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் மருந்துகளின் விலைகுறைப்பு தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டவைத்தியசாலையில் சீடீ ஸ்கேன் இல்லாமல் இருந்தது. இதுதொடர்பாக பிரதமரின் கவனத்துக்கு கொண்டுவந்தபோது அதனை பெற்றுக்கொள்ள பிரதமர் 8மில்லியன் ரூபா ஒத்துக்கி இருக்கின்றார். 

அதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவிக்கின்றேன். குறித்த வைத்தியசாலையில் சீடி ஸ்கேன்  இல்லாததன் காரணமாக நோயாளர்கள் அந்த ஸ்கேனை செய்துகொள்ள யாழ்ப்பாணம் அல்லது வுவுனியாவுக்கே செல்லவேண்டும்.

அத்துடன் சீடி ஸ்கேன் குறித்த வைத்தியசாலைக்கு பெற்றுக்கொள்ளப்பட்டால் அதனை பாதுகாப்பாக அங்கு வைப்பதற்கு அறை இல்லாமல் இருக்கின்றது. அதனால் அதற்கான அறையொன்றை நிர்மாணித்துக்கொள்ள தேவையான வசதிகளை தரவேண்டும். அதேபோன்று சிறுவர் வார்ட்டில் அடிப்படை தேவைகள் நிறைய காணப்படுகின்றன. அந்த குறைகளை நிவர்த்திசெய்ய போதுமான நிதி ஒதுக்கித்தரவேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29
news-image

ஊதா நிற இலை வடிவ முகம்...

2024-03-19 10:39:58
news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32
news-image

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

2024-03-19 10:01:21
news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52