ஐ.தே.க.வின் பிரதேச சபை உறுப்பினருக்கும் அவரது சகோதரிக்கும் விளக்கமறியல்

Published By: Daya

21 Aug, 2019 | 03:29 PM
image

(செ.தேன்மொழி)

வென்னப்புவ பிரதேச சபையின் உறுப்பினர் துலக்ஷி ஜமோதரி பெர்னாண்டோ மற்றும் அவரது சகோதரிக்கு எதிர்வரும் 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மாரவில நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

போக்குவரத்து பொலிஸாரின் கடமைக்கு இடையூறு செய்ததாக குறிப்பிட்டு கைது செய்யப்பட்ட வென்னப்புவ பிரதேச சபையின் உறுப்பினரும் அவரது சகோதரியும் இன்று  புதன்கிழமை மாரவில நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போதே சந்தேகநபர்கள் இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

வென்னப்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சீனோர் சந்தியில் கடந்த திங்கட்கிழமை மாலை 5.15 மணியளவில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை போக்குவரத்து பொலிஸார் நிறுத்தி விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த யுவதியிடம் விசாரணைகளை மேற்கொண்ட  பொலிஸார் ,  அவரிடம் சாரதி அனுமதிப்பத்திரமோ வேறு எந்தவிதமான ஆவணமோ இருக்கவில்லை. பின்னர் பொலிஸார் குறித்த யுவதியை தடுத்து வைத்துள்ளனர். 

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த குறித்த யுவதியின் சகோதரியான பிரதேச சபை உறுப்பினர் துலக்ஷி ஜமோதரி பெர்னாண்டோ இருவரும் பொலிஸாரின் கடமைக்கு செய்துள்ளதுடன், பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த யுவதியை அழைத்துச் செல்ல முற்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அங்கு கடமையில் ஈடுப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் இந்த சம்பவத்தை ஒளிப்பதிவு செய்துள்ளார். மோட்டார் சைக்கிள் மற்றும் வேனில் வந்த துலக்ஷி ஜமோதரி பெர்னாண்டோ மற்றும் அவரது தந்தையும் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த யுவதியை அழைத்துச் சென்றுள்ளனர். சந்தேக நபர்கள் செல்லும் போது மோட்டார் சைக்கிள்கள் இரண்டையும் விட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களை கைப்பற்றிய பொலிஸார் , செவ்வாய்கிழமை மாரவில நீதிவான் நீதிமன்றத்தில் சம்பவம் தொடர்பில் தெரிவித்து , காணனொளி காட்சிகளையும் காண்பித்துள்ளனர். பின்னர் நீதிவான் சந்தேக நபர்களை எதிராக பிடியாணை பிறப்பித்துள்ளார்.

அதற்கமைய பொலிஸார் செவ்வாய்கிழமை மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த யுவதியையும் துலக்ஷி ஜமோதரி பெர்னாண்டோவையும் கைது செய்துள்ளனர்.

இதன்போது வென்னப்புவ சிரிகம்பல பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய துலக்ஷி ஜமோதரி பெனாண்டோ எனப்படும் வென்னப்புவ பிரதேசசபை உறுப்பினரும் 16 வயதுடைய நிமாஷா நவாஞ்ஞலி ஆகியோரை கைது செய்தனர் . 

இதனை தொடர்ந்து பொலிஸார் குறித்த யுவதிகள் இருவரையும் மாரவில நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தியபோது , நீதிவான் இவர்களிருவரையும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

வென்னப்புவ பொலிஸார் சம்பவம் தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள மற்றைய இரு சந்தேக நபர்களை  கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01