படு­கொ­லை­க­ளுக்கு கண்­கண்ட சாட்­சி­யாக இருந்­த­மையே வைத்­தியர் கைதுக்கு காரணம் : சிறிதரன் எம்.பி. 

Published By: Digital Desk 3

21 Aug, 2019 | 12:45 PM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)

இரா­ணு­வத்­தி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட தமி­ழர்­க­ளுக்கு எதி­ரான படு­கொ­லை­க­ளுக்கு கண்கண்ட சாட்­சி­யாக  இருந்த கார­ணத்­தி­னா­லேயே பச்­சி­லைப்­பள்ளி பிர­தான  வைத்­தி­ய­சா­லையின் வைத்­திய அத்­தி­யட்சர் சின்­னையா சிவ­ரூபன் இரா­ணு­வத்­தி­னரால் திட்­ட­மிட்ட முறையில் கைது செய்­யப்­பட்­டுள்ளார் என  தமிழ் தேசி­யக்­ கூட்­ட­மைப்பு எம்.பி. எஸ். ஸ்ரீதரன் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற புலமைச் சொத்­துக்கள் மற்றும் டிஜிட்டல் தொழில்­நுட்பம் தொடர்­பான விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார். 

அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில், 

கிளி­நொச்சி மாவட்­டத்தின் பச்­சி­லைப்­பள்ளி பிர­தான  வைத்­தி­ய­சா­லையின் வைத்­திய அத்­தி­யட்சர் சின்­னையா சிவ­ரூபன் கடந்த 18 ஆம் திகதி இரவு ஆனை­யி­றவு சோதனைச் சாவ­டியில் வைத்து இரா­ணு­வத்­தி­னரால் கைது செய்­யப்­பட்டு பயங்­க­ர­வாத குற்­றப்­பி­ரி­வி­ன­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்ளார். 19 ஆம் திகதி காலை 10.30 மணிக்கு தான் இவர் கைது செய்­யப்­பட்­டமை தொடர்பில் இவரின் மனை­விக்கு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. காலை 11 மணிக்கே மனை­வியும் அவரின் இரு பிள்­ளை­களும் அவரை பார்­வை­யிட்­டுள்­ளனர். 

அமுலில் உள்ள பயங்­க­ர­வாத தடைச்சட்டம் மற்றும் அவ­ச­ர­கால சட்­டத்தின் பயங்­கர விளைவு இது. வைத்­திய அத்­தி­யட்சர் சின்­னையா சிவ­ரூபன் நீண்­ட­கா­ல­மாக யாழ். மாவட்­டத்தின் சட்ட வைத்­திய அதி­கா­ரி­யா­கப்­பணி புரிந்­தவர். தற்­போது கிளி­நொச்சி மாவட்ட பச்­சி­லைப்­பள்ளி பிர­தான  வைத்­தி­ய­சா­லையின் வைத்­திய அத்­தி­யட்­ச­ராக இருக்­கின்றார். இவர் துணிச்சல்மிக்­கவர். மக்­க­ளுக்­கா­கப் ­ப­ணி­யாற்­று­பவர். இதனால் இரா­ணுவ, பொலிஸ் புல­னாய்­வா­ளர்கள் இவரை பின் தொடர்ந்தும் இவர் மீதான காழ்ப்­பு­ணர்ச்­சி­களும் இவரின் கைதுக்கு கார­ண­மாக இருக்­க­லா­மென நாம் கரு­து­கின்றோம். 

குறிப்­பாக 2009, 2010 யுத்தம் முடிந்த காலப்­ப­கு­தியில் யாழ். மாவட்­டத்தில் சுமார் 300க்கு மேற்­பட்டோர் படு­கொலை செய்­யப்­பட்­டனர். ஆனால் இரா­ணுவ,பொலிஸ் பயங்­க­ர­வாத புல­னாய்­வுப்­பி­ரி­வினர் இவர்கள் தற்­கொலை செய்து கொண்­ட­தாக, விபத்தில் இறந்­த­தாக தெரி­வித்து அந்த விதத்­தி­லேயே பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன. அப்­போது சட்ட வைத்­திய அதி­கா­ரி­யாக இருந்த சிவ­ரூபன், பல மர­ணங்கள் அடித்­துக்­கொலை செய்­யப்­பட்­டுள்­ளன, சைலன்சர் துப்­பாக்­கியால் சுட்­டுக்­கொல்­லப்­பட்­டுள்­ளன, நவீன முறை­க­ளைப் ­ப­யன்­ப­டுத்­திக்­கொலை செய்­யப்­பட்­டுள்­ளன என்ற விட­யங்­களை வெளிக்­கொண்டு வந்­த­துடன் சர்­வ­தே­சத்­துக்கும் தெரி­யப்­ப­டுத்­தினார். அத்­துடன் இரு தட­வைகள் மனித உரி­மைகள் ஆணைக்­குழு முன்­பா­கவும் இவர் சாட்­சியம் வழங்­கினார். 

2006ஆம் ஆண்டு அல்­லைப்­பிட்­டியில் ஒரு வீட்­டுக்குள் இருந்த மக்கள் இரா­ணு­வத்­தி­னரால் சுட்­டுக்­கொல்­ல­பட்­டனர். இதில் பலர் காய­ம­டைந்­தனர். அப்­போது அவர்­களை அங்­கி­ருந்து கொண்­டு­வ­ர­மு­டி­யாத சூழல் இருந்­தது. 

இத­னை­ய­டுத்து யாழ். மாவட்­டத்தின் நீதி­ய­ர­ச­ரா­க­வி­ருந்த ஸ்ரீநிதி நந்­த­சே­க­ர­னுடன் இணைந்து அப்­போது யாழ். பல்­க­லைக்­க­ழ­கத்தின் மருத்­து­வ­பீட மாண­வ­னாக இருந்த சிவ­ரூபன் அங்கு சென்று காயப்­ப­ட­ட­வர்­களை  மீட்டு வந்து சிகிச்­சை­ய­ளித்த வர­லாறு  அவ­ருக்­குண்டு. இதற்­காக அவரை அமெ­ரிக்கா அழைத்து விசேட விருது வழங்­கி­யது. 

இவ்­வா­றான துணிச்சல் மிக்க வைத்­தி­யரின் பணியை முடக்­கு­வ­தற்­கா­கவும் தமி­ழர்­களின் பல படு­கொ­லை­க­ளுக்கு கண்­கண்ட சாட்­சி­ய­மாக இருப்­ப­த­னாலும் இரா­ணு­வத்­தி­னரால் திட்­ட­மிட்டு சோடிக்­கப்­பட்ட குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்­டுள்ளார். இவர் வீட்டில் வைத்து கைது செய்­யப்­ப­ட­வில்லை. மாறாக  ஆனை­யி­றவு சோதனைச் சாவ­டியில் வைத்­துத்தான் கைது செய்­யப்­பட்­டுள்ளார். இதன் மூலம் நாங்கள் மீண்டும் மீண்டும் உங்­களைக் கொல்­வோம், அழிப்போம், நீங்கள் எங்கள்  அடி­மைகள்  என்ற பயங்கர செய்தியையே இந்த அரசு தமிழ் மக்களுக்கு கூறுகின்றது.  இவரின் கைதால் பளை வைத்திய சாலையில் விடுதியில் இருந்து சிகிச்சை பெற்றுவந்த நோயாளர்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். சிகிச்சை மேற்கொள்ள போதுமான வைத்தியர்கள் இல்லை. 

நாட்டில் வைத்தியர்கள் இல்லாமல் வைத்தியசாலைகள் மூடப் படும் நிலையில் வைத்தியர்களை நடுவீதியிலிந்து கைது செய்யப் படுவார்களானால் இந்நாட்டின் ஜனநாயகத்தை என்னவென்று தெரிவிப்பதென்று புரியவில்லை  என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29
news-image

ஊதா நிற இலை வடிவ முகம்...

2024-03-19 10:39:58
news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32
news-image

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

2024-03-19 10:01:21
news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52