காணி விசேட ஏற்­பா­டுகள் சட்­ட­மூ­லத்தை வாபஸ் பெற்­றது அர­சாங்கம்

Published By: Digital Desk 3

21 Aug, 2019 | 11:16 AM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)

காணி உரித்து இல்­லா­த­வர்­க­ளுக்கு உரித்­து­ரிமை வழங்­கு­வ­தற்கு அர­சாங்கம் மேற்­கொண்ட நட­வ­டிக்­கையை எதிர்க்­கட்சி நீதி­மன்றம் சென்று தடுத்­துள்­ளது. அதனால் அரச காணி விசேட ஏற்­பா­டுகள் சட்­ட­மூ­லத்தை அர­ சாங்கம் வாபஸ் பெற்­றுக்­கொள்­கின்­றது. 

இதன் மூலம் 25 லட்சம் பேருக்கு காணி உரித்­து­ரிமை வழங்கும் திட்டம் தடைப்­பட்­டுள்­ளது என சபை முதல்­வரும் அமைச்­ச­ரு­மான லக்ஷ்மன் கிரி­யெல்ல சபையில் தெரி­வித்­த­போது, எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்கள் அதற்கு எதிர்ப்பு தெரி­வித்து  கருத்து தெரி­வித்­தனர். 

பாரா­ளு­மன்றம் நேற்று பிரதி சபா­நா­யகர் ஆனந்த குமா­ர­சிறி தலை­மையில் கூடி­யது. பிர­தான நட­வ­டிக்­கைகள் இடம்­பெற்ற பின்னர், சபை முதல்வர் லக்ஷ்மன் கிரி­யெல்ல விசேட கூற்­றொன்றை முன்­வைத்து தெரி­விக்­கையில்,

அர­ச­காணி விசேட ஏற்­பா­டுகள் சட்­ட­மூ­லத்தை அர­சாங்கம் வாபஸ்­பெற்­றுக்­கொள்­கின்­றது. எதிர்க்­கட்­சி­யினர் நீதி­மன்றம் சென்று அதனை தடுக்க நட­வ­டிக்கை எடுத்­துள்­ளதால் அதில் சட்­டப்­பி­ரச்­சி­னைகள் ஏற்­பட்­டி­ருக்­கின்­றன. காணி உரித்து இல்­லாத 25 இலட்­சம்­பே­ருக்கு காணி உரித்­து­ரிமை வழங்­கு­வ­தற்கே நாங்கள் நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்தோம். 

நாட்டில் பல­ருக்கு காணி உரித்­து­ரிமை இல்­லா­ததால் அவர்­க­ளுக்கு வங்கி கடன் கூட பெற்­றுக்­கொள்ள முடி­யாத நிலை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. அதனால் தான் நாங்கள் அர­ச­காணி விசேட ஏற்­பா­டுகள் சட்­ட­மூ­லத்தை பாரா­ளு­மன்­றத்­துக்கு சமர்ப்­பித்து காணி உரித்­து­ரிமை இல்­லா­த­வர்­க­ளுக்கு உரித்­து­ரிமை வழங்க நட­வ­டிகை எடுத்தோம். அதன் மூலம் அவர்­க­ளுக்கு அந்த காணியை விற்­க­மு­டியும். விரி­வாக்க முடியும். என்­றாலும் எதிர்க்­கட்சி நீதி­மன்றம் சென்று அதனை தடுத்­தி­ருக்­கின்­றது என்றார்.

இதன்­போது எதிர்க்­கட்சி உறுப்­பினர் பந்­துல குண­வர்த்­தன ஒழுங்­குப்­பி­ரச்­சினை ஒன்றை முன்­வைத்து தெரி­விக்­கையில், சபை முதல் தெரி­வித்­த­தற்­க­மைய நாங்கள் நீதி­மன்றம் சென்று இதனை தடுக்­க­வில்லை. மாறாக அர­சாங்கம் இந்த சட்ட மூலத்தின் ஊடாக எமது காணி­களை சர்­வ­தேச மய­மாக்கும் திட்­டத்­திலே இவ்­வாறு நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்­கின்­றது. அத­னால்தான் நீதி­மன்றம் சென்று தடையை ஏற்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுத்தோம் என்றார்.

அத­னைத்­தொ­டர்ந்து எதிர்க்­கட்சி உறுப்­பினர் சிசிர ஜய­கொடி தெரி­விக்­கையில், 

இந்த சட்­ட­மூ­லத்தை தடுத்து நிறுத்த நானும் நீதி­மன்றம் சென்றேன். சபை முதல்வர் தெரி­விப்­ப­துபோல் எந்த நோக்­கமும் எமக்­கில்லை. மாறாக அர­சாங்கம் இந்த சட்­ட­மூ­லத்தை சரி­யான முறையில் தயா­ரிக்­கா­மலே சமர்ப்­பித்­தி­ருக்­கின்­றது. அத­னால்தான் நீதி­மன்றம் அந்த சட்­ட­மூலம் சட்­ட­வி­ராேதம் என தீர்ப்­ப­ளித்­தி­ருக்­கின்­றது. இதன் மூலம் எமது விவ­சாய பூமிகள் வெளி­நாட்­ட­வர்­க­ளுக்கு விற்­பனை செய்­வதை தடுத்­தி­ருக்­கின்றோம் என்றார்.

அத­னைத்­தொ­டர்ந்து விமல் வீர­வன்ச தெரி­விக்­கையில், நாட்டு மக்­க­ளுக்கு காணி உரித்­து­ரிமை வழங்­கு­வ­தற்கு நாங்கள் எதிர்ப்பு இல்லை. ஆனால் அதில் ஒரு நிபந்­தனை இருக்­கின்­றது. அதா­வது வெளி­நாட்­ட­வர்­க­ளுக்கு காணி­களை விற்­க­மு­டியும் என்ற நிபந்­த­னையை தெரி­வித்தே நீங்கள் காணி உரித்துரிமை வழங்க நடவடிக்கை எடுத்திருக்கின்றீர்கள். அதனால் வெளிநாட்டவர்கள் இந்த நாட்டில் காணிகளை பெற்றுக்கொள்ள முடியாதவகையில் சட்டத்தை திருத்தியமைத்து முடியுமானால் இந்த சட்ட மூலத்தை சமர்ப்பியுங்கள். அவ்வாறான காணி உரித்தை வழங்குவதற்கு நாங்கள் நூறுவீதம் ஆதரவளிப்போம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08