காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை யாழில் திறக்கக்கூடாது ;வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவா்களின் அமைப்புக்கள்

Published By: Digital Desk 4

20 Aug, 2019 | 10:10 PM
image

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் யாழ்.மாவட்டத்தில் திறக்கப்படகூடாது. என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவா்களின் வடகிழக்கு மாகாணங்களை சோ்ந்த அமைப்புக்கள் கூட்டாக கூறியுள்ளதுடன், திறக்கப்பட்டால் போராட்டம் நடாத்துவோம் எனவும் கூறியுள்ளனா். 

யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவா்கள் மேற்கண்டவாறு கூறியுள்ளனா். 

இதன்போது மேலும் அவா்கள் கூறுகையில், 

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகத்தின் பிராந்திய அலுவலகங்களை திறப்பதற்கு நாம் எதிர்ப்பு தெரிவித்தோம். அதை ஏற்றுக்கொண்ட ஆணையாளர் பிராந்திய அலுவலகங்களை திறக்கமாட்டோம் என கூறியிருந்தார். 

இந்த அலுவலகத்தினால் எந்த பலனும் கிடையாது என்பதாலேயே எதிர்த்து வருகிறோம். இந்த நிலையில் வரும் 24ம் திகதி யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கான அலுவலகம் திறக்கப்படவுள்ளது. இதற்கு நாம் எதிர்ப்பை தெரிவிக்கிறோம். 

அதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவோம். அரசியல்வாதிகளும் எமது போராட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும். எதிர்வரும் 30ம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கான தினத்தில் வடக்கு, கிழக்கில் போராட்டங்களை செய்ய தீர்மானித்துள்ளோம். 

முள்ளிவாய்க்காலில் உறவுகளை இராணுவத்திடம் கையளித்த இடத்திலும், கல்முனையிலும் போராட்டத்தை நடத்தவுள்ளோம். இதில் அரசியல்வாதிகள், பொதுஅமைப்புக்கள், மக்கள் கலந்து கொண்டு ஆதரவளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38