நடப்பாண்டில் இதுவரையில் மீட்கப்பட்டுள்ள  போதைப்பொருள் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ள கடற்படை 

Published By: Digital Desk 4

20 Aug, 2019 | 05:32 PM
image

(ஆர்.விதுஷா)

போதைப்பொருள்  கடத்தலுக்கு  எதிராக  கடற்படையினரால்  மேற்கொள்ளப்பட்டுவரும்   விசேட தேடுதல்  மற்றும்  சுற்றிவளைப்பு   நடவடிக்கைகளின்  போது   இவ்வருடத்தின்   இது வரையான  சுமார்  ஏழரை  மாததில்   452  கிலோ  ஹெரோயினும்   2398 கிலோ  கேரளா  கஞ்சாவும்  கைப்பற்றப்பட்டன. 

கடந்த  வருடத்தின்  இதே காலப்பகுதியின்  போது  கைப்பற்றப்பட்ட  போதைப்பொருளுடன்  ஒப்பிடும்  போது  இவ்வருடம்  அதிகளவான  போதைப்பொருளை  கடற்படையினர்  கைப்பற்றியுள்ளனர்.  

கடந்த  வருடம்  முழுவதுமாக  232  கிலோ ஹெரோயின்  போதைப்பொருளும் 2113  கிலோ கேரளாகஞ்சாவும்  கைப்பற்றப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கை  தொடர்பிலான  புள்ளிவிபரத்தை கடற்படை வெளியிட்டிருந்தது. இது  தொடர்பில்  கடற்படை  ஊடகப்பேச்சாளர்  லெப்டினன்  கொமாண்டர்  இசுறு  சூரியபண்டாரவிடம்  வினவிய  போது.   

போதைப்பொருள்  கடத்தல்  நடவடிக்கைகள்   வடக்கு  மற்றும்  வடமேல்  மாகாணங்களின்  கரையோரத்தை  அண்டிய  பகுதிகளிலேயே  அதிகளவில்  இடம்  பெறுவதாகவும்  கடற்படை  தளபதி   வையிஸ்  அத்மிரல்   பியர்  த சில்வாவின்  ஆலோசனைக்கு   அமைய  போதைப்பொருள் கடத்தல்  நடவடிக்கை  தொடர்பிலான  முறியடிப்புக்களை    தொடர்ந்தும்  மேற்கொண்டு  வருவதாகவும்  குறிப்பிட்டிருந்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41