அமெரிக்க பிரஜையாகயிருந்தவேளை தேர்தலில் வாக்களித்தாரா கோத்தபாய- ?

Published By: Rajeeban

20 Aug, 2019 | 03:26 PM
image

2005 இல் கோத்தபாய ராஜபக்ச தனது பெயரை வாக்காளர் பதிவில் பதிவு செய்தார் என வெளியாகும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும்  என தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சிங்கள பத்திரிகையாளர் ஒருவர் தேர்தல் ஆணையகத்திடம் இது குறித்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார் என தெரிவித்துள்ள  தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான அமைப்பு 2005 இல் வாக்காளர் பதிவில் கோத்தபாய ராஜபக்சவின் பெயர் பதியப்பட்டிருந்தது இலங்கையின் பிரஜையாக இல்லாதபோதிலும் அவர் தேர்தலில் வாக்களித்தார் என குறிப்பி;ட்ட பத்திரிகையாளர் தனது முறைப்பாட்டில் தெரிவித்திருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் பொதுஜனபெரமுனவின் வேட்பாளராக போட்டியிடவுள்ளதால் இந்த குற்றச்சாட்டு அதிகம் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது எனவும் தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் பிரஜையில்லாத ஒருவர் தேர்தல்களில் வாக்களிக்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ள தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் அவ்வாறு வாக்களிப்பது குற்றம்  இந்த குற்றத்தில் ஈடுபடுபவர்களை இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் சட்டத்தின் கீழ் தண்டிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

இந்த குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்பட்டால் அது இலங்கையின் அரசமைப்பையும் சட்டத்தையும் பாராதூரமாக மீறியதாக அமையும் எனவும் தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் நடைமுறையின் அடிப்படையையே மீறியதாகவும் இது அமையும் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்ச தன்மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்பதை நிருபிப்பதற்காக இது குறித்த விசாரணைகளிற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்  தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தேர்தல் ஆணையகம் இந்த குற்றச்சாட்டுகள் குறித்த பக்கசார்பற்ற விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33