4 தொன் குப்பைக்குள்ளிருந்து தவறிய மோதிரங்களை கண்டுபிடித்த பெண்

Published By: Digital Desk 3

20 Aug, 2019 | 03:38 PM
image

தாய்வானில் பெண் ஒருவர் குப்பையில் தவறுதலாக வீசிய தங்க மோதிரங்களை 4 தொன் குப்பைகளில் இருந்து  தேடி கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

தாய்வானில் மேற்கு பகுதியான இலானில் வசித்த பெண் ஒருவர் அலுவலகத்திலுள்ள குப்பைத்தொட்டியில் தவறுதலாக தான் அணிந்திருந்த தங்க மோதிரங்களை வீசியுள்ளார்.

அரைமணி நேரம் கழித்து மோதிரத்தை காணவில்லை என தெரிவித்து அந்தப் பெண் தேடியுள்ளார். பின்னர் குப்பைதொட்டியில் பார்க்கும் போது குப்பைதொட்டியிலுள்ள குப்பைகள் வெளியே எறியப்பட்டிருந்தன.

இதையடுத்து குறித்த பெண், சுற்றுச்சூழல் துறைக்கு ஒரு தொலைபேசி அழைப்பைக் கொடுத்தார்.

குப்பைகளை ஏற்றிச் சென்ற வண்டியை சுற்றுச்சூழல் துறைக்கு அழைத்து கண்டுபிடித்தார். பின்னர் அவர்களை குப்பை கொட்டும் இடத்திற்கு அருகில் வரவழைத்து நான்கு ஊழியர்களுடன் 4  தொன் வீட்டுகழிவுப் பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டன.

அரை மணி நேரம் கழித்து அப்புறப்படுத்தப்பட்ட காய்கறிகளின் குவியலில் இருந்து தங்க மோதிரங்கள் இரண்டும் மீட்கப்பட்டுள்ளன.

" எனது இரண்டு மோதிரங்களை மிக விரைவாக கண்டுபிடிக்க உதவியதற்காக குப்பைகளை அகற்றும் ஊழியர்களுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், ’’ என்று அந்த பெண் கூறியுள்ளார்.

‘இது கடலில் ஒரு ஊசியைத் தேடுவது போல இருந்தது.’  என குப்பைகளை அகற்றும் ஊழியர்களின் தலைவர்  தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right