சுகாதார சீர்கேடான உணவகங்களுக்கு எதிராக சட்ட நடடிவக்கை

Published By: Daya

20 Aug, 2019 | 11:50 AM
image

வடமாகாண  ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் அறிவுறுத்தலுக்கு அமைவாக சங்கானை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் உணவுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் ஆளுநர் செயலணி இணைந்து நேற்று(19) உணவங்கள் மற்றும் மருந்தகங்கள் மீது திடீர் கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டனர்.

உணவகங்களின் தரம் மற்றும் சட்டத்திற்கமைவாக இயங்குகின்றனவா என்று மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையின் போது 15 உணவகங்கள் மிகவும் தகுதியற்று சுகாதார சீர்கேடுகளுடனும், உணவுகள் மிகவும் தரமற்ற  தயாரிப்புக்கள் , உணவு தயாரிக்கும் சமையற்கூடங்கள் மற்றும் பாத்திரங்கள் அசுத்தமாகவும், சமைத்த உணவுகள்,  பிளாஸ்ரிக் பாத்திரங்களில் சேமிக்கப்பட்டிருந்ததுடன் அழுகிய மரக்கறி வகைகள் சமையல் பாவனைக்கு பயன்படுத்தப்பட இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டன.

இவற்றில் அதிகளவிலான சுகாதார சீர்கேடுகளுடன் காணப்பட்ட 9 உணவகங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதுடன் ஒரு உணவகத்தில் காணப்பட்ட தகுதியற்ற ரொட்டிகள் மற்றும் மரக்கறி வகைகள் அழிக்கப்பட்டன. மேலும், சுகாதார சீர்கேடுகளுடன் தரமற்றுக் காணப்பட்ட ஏனைய உணவகங்களுக்குக் கால அவகாசம் வழங்கப்பட்டதுடன் அவ்வாறு தவறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் 4 மருந்தகங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது 2 மருந்தகங்களில் தகுதியற்ற மருந்து வழங்குநர்கள் சேவையிலிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டு சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

மனிதனுக்கு அடிப்படையான தேவை உணவு. பெரும்பாலான உணவகங்கள் சீர்கேடுகளுடன் காணப்படுவதால் அவை சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு இயங்குமாறும் தவறும் பட்சத்தில் இவ்வாறான விஜயத்தின்போது சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும். வடமாகாணத்தின் அனைத்து பிரதேசங்களிலும் இந்த சோதனை நடவடிக்கைகள் தொடரும் என்றும் தகுதியற்ற உணவங்கள் காணப்படின் மக்கள் இதுதொடர்பில் ஆளுநர் அலுவலகத்தின் 021 221 9375 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35