ஐ.தே.க பாராளுமன்றக் குழுக்கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இன்றும் எந்த தீர்மானமும் எடுக்கப்பட வில்லை

Published By: Digital Desk 4

19 Aug, 2019 | 11:02 PM
image

(நா.தினுஷா) 

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்றக் குழு  இன்று திங்கட் கிழமை கூடியிருந்த நிலையில் இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எந்த தீர்மானமும் எடுக்கப்பட வில்லை.  இருப்பினும் இந்த வார இறுதிக்குள் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து தீர்மானம் எடுப்பதற்காக கட்சியின் செயற்குழு மற்றும் பாராளுமன்ற குழுவை மீண்டும் ஒரே சந்தர்பத்தில் அழைக்குமாறு  தாம் கோரியதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷான் விதானகே தெரிவித்தார். 

இன்று  பிற்பகல் வேளையில் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற குழு கூடியது. இதன் போது ஜனாதிபதி வேட்பாளர் குறித்து  கலந்துரையாடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த போதிலும்  அது குறித்து எந்த பேச்சும் இடம்பெறவில்லை. பாராளுமன்ற நிகழ்ச்சி நிரல் தொடர்பாக மாத்திரமே கலந்துரையாடப்பட்டது. 

இருப்பினும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தீர்மானிப்பதற்காக கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்காக கோரிக்கையொன்றும் இன்று முன்வைக்கப்பட்டது. இந்த வார இறுதிக்குள் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தீர்மானிப்பதற்காக ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவையும் பாராளுமன்ற குழுவையும் ஒரே நேரத்தில் அழைத்து கலந்துரையாடலை முன்னெடுக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம்  கோரியுள்ளோம். 

அவ்வாறு இவ்வார இறுதிக்குள் வேட்பாளர் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக செயற்குழுவும் பாராளுமன்ற குழுவும் கூடுமாக இருந்தால் வேட்பாளர் குறித்து முக்கிய தீர்மானம்; எடுக்கப்படும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37