கோத்தபாய மீதான போர்க் குற்றச் சாட்டுக்களை தமிழ் மக்கள் மன்னித்து மறக்க வேண்டும் ; வரதராஜப்பெருமாள்  

Published By: Digital Desk 4

19 Aug, 2019 | 04:31 PM
image

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மீதான போர்க் குற்றச் சாட்டுக்களை தமிழ் மக்கள் மன்னித்து மறக்க வேண்டும் என இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தெரிவித்தார்.

யாழ்ப்பணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்று அவர் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மீதான போர்க் குற்றச் சாட்டுக்கள் தொடர்பாக தமிழ் மக்கள் இனி அக்கறை செலுத்த வேண்டியதில்லை. ஏனெனில் போர்க் குற்றத்தில் கோத்தபாய மட்டும் ஈடுபடவில்லை.போர் நடைபெற்ற போது தமிழீழ விடுதலைப் புலிகளும் போர்க் குற்றத்தில் ஈடுபட்டனர் என சர்வதேசம் கூறி வருகின்றது.

ஆனால் எதோ கோத்தபாய மட்டும் தான் போர்க் குற்றத்தில் ஈடுபட்டதாக மாயை உருவாக்கப்பட்டுள்ளது.இது முழுக்க முழுக்க அரசியல் ரீதியான குற்றச் சட்டே.எனவே தமிழ் மக்கள் இவற்றை மறந்து மன்னித்து அபிவிருத்தி நோக்கி பயணிக்க வேண்டும்.

நாம் தமிழ்த் தேசியம் தனி நாடு என்ற விடுதலை கோரிய காலம் போய்விட்டது.இப்போது ஒரு நாட்டில் சகல இன மக்களும் ஒன்றுபட்டு வாழ வேண்டிய காலமாகும்.அதனை உணர்ந்து நாம் செயற்பட வேண்டும்.இங்குள்ள சிலர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தேசியத்தை காத்தவர் என்றும் கோத்தபாய அதனை அழித்தவர் என்ற கருத்தை பரப்பி வருகின்றனர்.கடந்த காலங்களில் இதே ஐக்கிய தேசியக் கட்சியினர் எவ்வளவு கொலைகளை செய்தவர்கள் என்பதை மக்கள் மறந்து விடக்கூடாது.

நாட்டில் அடுத்த ஜனாதிபதியாக வரப்போறவர் தனி சிங்கள வாக்குகளினால் மட்டும் வந்தால் அது தமிழ் மக்களை பாதிக்கும்.எனவே தான் நாம் ஆதரவு கூடவுள்ள தரப்புக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளோம்.தமிழ் மக்களின் ஆதரவு கோத்தபாயவுக்கு கிடைக்க வேண்டும்.என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38