'அரசியல் தீர்வுத்திட்டம்' என்று தமிழர்களை நம்பவைத்துக் ஏமாற்றும் போக்கே எஞ்சியிருக்கிறது

Published By: J.G.Stephan

19 Aug, 2019 | 03:54 PM
image

(நா.தனுஜா)

'அரசியல் தீர்வுத்திட்டம்' என்று தமிழ் மக்களை நம்ப வைத்துக் காலத்தைக் கடத்துவது ஒன்றே எஞ்சியிருக்கிறது. அதிகார அரசியலைப் பயன்படுத்தி கிழக்கில் தமிழ் மக்களின் அனைத்து வாய்ப்புக்களையும் சூறையாடும் அராஜக அரசியலையும் முடிவிற்குக் கொண்டு வரும் கொள்கைகளை முன்வைக்கும் கட்சிக்கே இனிவரும் காலங்களில் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என இலங்கை தேசிய ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது. 

இவ்விடயம் குறித்து இலங்கை தேசிய ஜனநாயகக் கட்சியின் தலைவரும் இலங்கை இந்து சம்மேளனத்தின் தலைவருமான நாரா.டி.அருண்காந்த் மேலும் கூறியதாவது,

தமிழ் மக்களிடம் எஞ்சியிருக்கும் காணிகளையும், இரு மாகாண சபைகளையும் தக்கவைத்துக் கொள்வதே பெரும்பாடாய் இருக்கும் சூழ்நிலையில் யதார்த்த அரசியல் சூழ்நிலைகளைத் தெளிவாகப் புரிந்துகொண்டு, அதற்கேற்ற அரசியலில் தமிழ்த் தலைவர்கள் ஈடுபட வேண்டும். 

ஒருபுறம் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களின் காணிகளை மீட்கும் போது மறுபுறம் கிழக்கு மாகாணத்திலும், வன்னியிலும் தமிழ் மக்களின் காணிகள் ஏனையோரால் கபளீகரம் செய்யப்படுகின்றது. இவற்றுக்கும் மேலாக தமிழ் மக்களின் பிரதிநிதிகளின் ஆதரவுடன் தமிழ்மக்களின் மண்ணிலுள்ள வளங்கள் மணல் மாஃபியாக்களால் சூறையாடப்பட்டு வருகின்றது.

வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கதிரவெளியில் நடைபெற்றுவரும் ஹில்மனைட் கலந்த மண் அகழ்வு மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்றுவரும் மண் அகழ்வு போன்ற செயற்பாடுகள் தமிழ் அதிகாரிகள் மற்றும் தமிழ் பேசும் அரசியல்வாதிகளின் ஆதரவுடனேயே மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகின்றது. 

இந்நிலையில் 'தீர்வுத்திட்டம்' என்று தமிழ் மக்களை நம்பவைத்துக் காலத்தைக் கடத்துவது ஒன்றே எஞ்சியிருக்கிறது. தமிழ் இளைஞர்களின் வேலைவாய்ப்புப் பிரச்சினைகளையும், அதிகார அரசியலைப் பயன்படுத்தி கிழக்கில் தமிழ் மக்களின் அனைத்து வாய்ப்புக்களையும் சூறையாடும் அராஜக அரசியலையும் முடிவிற்குக் கொண்டுவரும் கொள்கைகளை முன்வைக்கும் கட்சிக்கே இனிவரும் காலங்களில் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்.

அந்தவகையில் இவ்விடயங்களை முன்நிறுத்தி தேசிய கட்சிகளுடன் நாங்கள் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றோம். இளைஞர், யுவதிகளுக்கான வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொடுப்பதே எம்முடைய பிரதான கோரிக்கையாகும். இந்நோக்கத்தை அடைவதற்காக இந்திய அரசாங்கத்துடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தவிருக்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொது மக்கள் எங்கும் தீ வைக்க...

2024-03-19 13:41:34
news-image

யாழில் கல்லூரி வீதிக்கு ரயில் கடவை...

2024-03-19 12:58:21
news-image

பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்க 20...

2024-03-19 12:43:19
news-image

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை...

2024-03-19 12:38:07
news-image

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற...

2024-03-19 12:11:22
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-19 12:09:35
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29