ஜனா­தி­பதி தேர்தலில் யாருக்கு ஆதரவு குறித்து சிவா­ஜி­லிங்கம் கருத்து

Published By: Digital Desk 4

19 Aug, 2019 | 02:31 PM
image

ஜனா­தி­பதி வேட்­பாளர் தொடர்­பாக கட்­சி­களின் விஞ்­ஞா­ப­னத்தின் அடிப்­டை­யி­லேயே ஆத­ரவு தெரி­விப்­பது குறித்து தீர்­மா­னிப்போம் என்று தமி­ழீழ விடு­தலை இயக்­கத்தின் (ரெலோ) தவி­சாளர் எம்.கே. சிவா­ஜி­லிங்கம் தெரி­வித்தார்.

வவு­னி­யாவில் அமைந்­துள்ள தமி­ழீழ விடு­தலை இயக்­கத்தின் அலு­வ­ல­கத்தில் நேற்று இடம்­பெற்ற தலை­மைக்­கு­ழுவின் கூட்­டத்தின் பின்னர் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்­பாக மேலும் தெரி­விக்­கையில், 

இலங்­கையின் எட்­டா­வது ஜனா­தி­பதித் தேர்தல் இந்த ஆண்டு நவம்பர் மாதம் இடம்­பெற இருக்­கின்ற நிலையில், இது தொடர்­பாக விரி­வான கலந்­து­ரை­யா­டலை தமி­ழீழ விடு­தலை இயக்கம் நேற்­றைய தினம் ஐந்து மணி நேரத்­திற்கு மேலாக நடத்­தி­யது.

எனவே இந்த நாட்டில் ஏழு ஜனா­தி­பதித் தேர்தல் கடந்த நிலை­யிலும் தமிழ் மக்­க­ளுக்­கான நிரந்­த­ர­மான தீர்வு எதுவும் கிடைக்­க­வில்லை. எது எவ்­வாறு இருந்­தாலும் ஈழத்­தமிழ் மக்கள் தங்­க­ளுக்கு ஏதா­வது கிடைக்­குமா என்ற நிலையில் இத்­தேர்­தலை பயன்­ப­டுத்த வேண்டும் என்ற எண்­ணப்­பாடு இருக்­கின்­றது. எனவே இது தொடர்­பாக தமி­ழீழ விடு­தலை இயக்கம் இம்­மாத இறு­திக்குள் மத்­தி­ய­குழு மற்றும் ஏனைய உறுப்­பி­னர்­க­ளுடன் கலந்­து­ரை­யாடி முடி­வெ­டுக்க இருக்­கின்­றது.

பிர­தான கட்­சிகள் இரண்டு தமது  வேட்­பா­ளர்­களை அறி­வித்­தி­ருக்­கி­ன்றன. இந்த சூழ்­நி­லையில் அவர்­க­ளு­டைய தேர்தல் அறிக்­கையை பொறுத்­துதான் எங்­க­ளு­டைய தீர்­மா­னத்தை இந்­நாட்டு மக்­க­ளிற்கு பகி­ரங்­க­மாக தெரி­விக்க இருக்­கின்­றோம் என்றார்.

இதே­வேளை, தமி­ழீழ விடு­தலை இயக்­கத்­தி­னு­டைய தீர்­மா­ன­மா­னது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­னு­டைய  தீர்­மா­ன­மாக இருக்­குமா  என ஊட­க­வி­ய­லாளர் ஒருவர் எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல­ளிக்­கையில்,

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை பொறுத்­த­வரை மூன்று கட்­சிகள் இருக்­கின்­றன. அதில் ஒரு கட்சி எங்­க­ளு­டைய கட்­சி­யாகும். நாங்கள் எடுக்­கின்ற தீர்­மா­னத்­தினை ஏனைய இரு கட்­சி­க­ளோடும் கலந்­தா­லோ­சித்து ஒரு இறுதித் தீர்­மா­னத்­திற்கு வருவோம். எனவே நாங்கள் எடுக்­கின்ற தீர்­மா­னத்­திற்கு அவர்கள் சாத­க­மாக இருக்கப் போகின்­றார்­களா அல்­லது எதி­ராக இருக்கப் போகின்­றார்­களா என்­பதை காலம்தான் பதில் சொல்லும் என்றார்.

உங்­க­ளு­டைய தீர்­மா­னத்­திற்கு எதி­ராக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தீர்­மானம் இருக்­கு­மே­யானால், உங்­க­ளு­டைய தீர்­மா­னத்­தி­லேயே உறு­தி­யாக இருப்­பீர்­களா என ஊட­க­வி­ய­லாளர் ஒருவர் எழுப்­பிய மற்­று­மொரு கேள்­விக்கு பதி­ல­ளிக்­கையில்,

இது தொடர்­பாக நாங்கள் கருத்து தெரி­விக்­க­வில்லை. எங்­க­ளது எதிர்­கால செயற்­பா­டுகள் தொடர்­பாக ஒவ்­வொரு கட்­டங்­க­ளிலும் ஊடக வாயி­லாக தெரிந்து கொள்ள முடியும் என்றார்.

நீங்கள் எப்­பொ­ழு­துமே அர­சாங்­கத்தை குறை கூறு­ப­வர்­க­ளா­கவும் அர­சாங்­கத்­துடன் சேர்ந்து இயங்­கு­ப­வர்­களை குற்றம் சாட்­டு­ப­வ­ரா­கவும் இருக்­கின்­றீர்கள். ஆனால் உங்­க­ளு­டைய கட்­சியின் தலைவர் பாரா­ளு­மன்ற குழுக்­களின் பிரதித் தலை­வ­ரா­கவும் அர­சாங்­கத்­துடன் சேர்ந்து இயங்­கு­ப­வ­ரா­கவும் அரச சொத்­துக்­களை அனு­ப­விப்­ப­வ­ரா­கவும் இருந்து வருகின்ற வேளையில், ஒரே கட்­சிக்குள் இருக்­கின்ற நீங்கள் இரு­வரும் வெவ்­வே­று­பட்ட கருத்­துக்­களை கொண்­டி­ருப்­பதன் காரணம் என்ன என்று ஊட­க­வி­ய­லாளர் ஒருவர் எழுப்­பிய மற்­று­மொரு கேள்­விக்கு பதி­ல­ளிக்­கையில்,

அவ்­வாறு ஒன்றும் இல்லை. எங்­க­ளது கட்­சியின் தீர்­மா­னங்­களை கட்­சி­யி­னு­டைய தலைவர் நிறை­வேற்றி இருக்­கின்றார். குறிப்­பாக கடந்த செப்­டெம்பர் மாதம் இடம்­பெற்ற தமி­ழீழ விடு­தலை இயக்­கத்தின் தேசிய மாநாட்­டிலே இந்த ஆண்­டுக்­கான வரவு – செல­வுத் ­திட்­டத்­திற்கு ஆத­ர­வ­ளிப்­ப­தில்லை என்­ப­தனை பாரா­ளு­மன்ற உறுப்­பினர் செல்வம் அடைக்­க­ல­நாதன் இரண்டாம் மூன்றாம் வாக்­கெ­டுப்பில் கலந்து கொள்­ளாமல் விட்­டதன் மூலம் கட்சி நட­வ­டிக்­கை­களை ஏற்­றுக்­கொண்டு இருக்­கின்றார். 

இன்­னொரு விடயம் பிரதி குழுக்­களின் தலைவர் என்­பது அர­சாங்­கத்­தி­னு­டைய பதவியல்ல. 2004 ஆம் ஆண்டு நாங்கள் 22 பேர் பாராளுமன்றம் சென்ற போது பிரதமராக மஹிந்த ராஜபக் ஷ இருந்த பொழுது நாங்கள் வாக்களிப்பதன் மூலம் எங்களுடைய ஆதரவின் மூலம் எதிர்க்கட்சியினுடைய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டார். 

அந்த வகையில் செல் வம் அடைக்கலநாதன் இன்றைக்கும் எதிர்க் கட்சியின் ஆசனத்தில் இருப்பதன் மூலம் இது அரசாங்கத்தினுடைய பதவி அல்ல என்பது தெளிவாகின்றது எனவும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58
news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10
news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51
news-image

மடாட்டுகமவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி 62...

2024-04-16 11:04:45