தெரிவுக்குழு விசாரணைக்கு ஜனாதிபதி ஆணைக்குழு உறுப்பினர்கள் அழைப்பு - இந்த வாரமே ஜனாதிபதிக்கும் அழைப்பு 

Published By: Digital Desk 4

18 Aug, 2019 | 07:20 PM
image

(ஆர்.யசி)

ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராய ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு நாளை மறுதினம் மீண்டும் பாராளுமன்ற தெரிவிக்குழு முன்னிலையில் ஆஜராக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த வார  இறுதிக்குள் ஜனாதிபதியையும் அழைக்க தீர்மானம் எடுத்துள்ளனர். 

Image result for ஜனாதிபதி ஆணைக்குழு உறுப்பினர்கள்

ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு தமது விசாரணைகளை முன்னெடுத்துவருகின்ற நிலையில் இறுதியாக இரண்டு விசாரணைகள் மாத்திரம் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் நாளை  ஜனாதிபதி ஆணைக்­கு­ழுவை நெறிப்­ப­டுத்­திய உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ரசர் விஜித மலல்­கொட மற்றும் அதன் உறுப்­பி­னர்­க­ளான முன்னாள் பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்­ககோன், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் செய­லாளர் பத்­ம­சிறி ஜய­மான்ன ஆகிய மூவ­ருக்­கும் தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் இந்த வார இறுதிக்குள் ஜனாதிபதிக்கும் தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராக ஏற்கனவே தெரிவுக்குழு தெரிவித்துள்ள நிலையில் 20ஆம் திகதியில் இருந்து 23 ஆம் திகதிக்குள் ஜனாதிபதிக்கு இலகுவான ஒரு தினத்தில் தெரிவுக்குழுவிற்கு வரலாம் எனவும் தெரிவித்துள்ளனர். 

அதற்கமைய ஜனாதிபதி இந்த வாரத்தில் ஒரு தினத்தை தெரிவுசெய்து தெரிவுக்குழுவிற்கு அனுப்புவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44