காட்டு யானைகள் தொல்லையால் மக்கள் அச்சம் 

Published By: Digital Desk 4

18 Aug, 2019 | 06:36 PM
image

அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஆலம்குளம் கிராம குடியிருப்புப் பிரதேசத்தில் காட்டு யானைகள் சில இன்று(18) அதிகாலை உட்புகுந்து கடும் சேதங்களை உண்டாக்கியுள்ளன.

அதிகாலை ஒரு மணியளவில் மக்கள் குடியிருப்புப் பிரதேசத்திற்குள் உட்புகுந்த இக்காட்டு யானைகள் சேதங்களை உண்டு பண்ண எத்தனித்த வேளையில் அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு அக்காட்டு யானைகளை விரட்ட முற்பட்ட போது பொதுமக்களை தாக்குவதற்கு காட்டு யானைகள் எத்தனித்தாகவும், யானைகளின் தாக்குதலிலிருந்து தாம் தெய்வாதீனமாக உயிர் தப்பியதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

மக்கள் குடியிருப்புகளில் இருந்த மதிற்சுவர்கள் சிலவற்றையும், நுழைவாயில் கதவு, பாதுகாப்பு வேலிகள் போன்றவற்றை உடைத்து நாசம் செய்துள்ளதுடன், பெறுமதி மிக்க மரங்கள் சிலவற்றையும் சேதப்படுத்தியுள்ளதுடன் மேட்டு நிலப் பயிர்கள் மற்றும் மரம் செடி கொடிகள் சிலவற்றையும் இவ் யானைகள் தாக்கியுள்ளன. 

இரவு வேளைகளில் காட்டு யானைகள் பல இப்பிரதேசத்தில் நடமாடுவதால் பல்வேறான இன்னல்களுக்கு தாம் தினமும் முகம் கொடுத்து வருவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அட்டாளைச்சேனை நகர்ப் பகுதியிலிருந்து சுமார் 13 கிலோமீற்றர் தொலைவில் உள்ள எல்லைப்புறக் கிராமமான ஆலம்குளம்; கிராமம் வயலும் வயல் சார்ந்த பிரதேசத்தில் அமையப் பெற்றுள்ளது. வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பெருந்தொகையான மக்கள் காட்டு யானைகளின் தொல்லையால் அடிக்கடி பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

சிறுபோக நெல் அறுவடை மற்றும் கரும்புச் செய்கை போன்றன இடம்பெற்றதனைத் தொடர்ந்து அண்மைக் காலமாக இரவுப் பொழுதுகளில் மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகளுக்குள் உட்புகுந்து உப உணவுப் பயிரச் செய்கைகள், விவசாயச் செய்கைகள், மரம் செடி கொடிகள் போன்றவற்றை காட்டு யானைகள் நாசம் செய்து வருவதுடன், தமது குடியிருப்புக்களையும் சேதமாக்கி வருவதாகவும் கவலையுடன் தெரிவிக்கும் பிரதேச மக்கள்,

 அன்றாடம் தமது உயிருக்கு யானைகளால் ஏதும் நடந்து விடுமோன என்ற அச்ச உணர்வுடனே தமது இரவு பொழுதுகளைக் கழித்து வருவதாகவும் கவலையுடன் இம்மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50