யார் நல்லவர்? யார் திருடர்? என்பதை நான் நன்கறிவேன்: ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஜனாதிபதியின் முக்கிய வேண்டுகோள்!

Published By: J.G.Stephan

18 Aug, 2019 | 03:55 PM
image

எதிர்வரம் ஜனாதிபதி  தேர்தலில், யார்  வேட்பாளராக போட்டியிட்டாலும் போதைப் பொருளை ஒழிப்பதாகவும் போதைபொருள் வர்த்தகர்களுக்கு மரண தண்டனை வழங்குவதாகவும் உறுதிமொழியளிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

 இன்று (18.08.2019), பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், கருத்து தெரிவித்த ஜனாதிபதி, “கடந்த 25 ஆண்டுகளில் எனது அனுபவத்திற்கு அமைய யார் நல்லவர்? யார் திருடர்? என்று என்னால் கூற முடியும். கடந்த 5 தொடக்கம் 10 வருடங்களுக்கு உட்பட்ட காலப்பகுதியில் இருந்த அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ஜனாதிபதிகள் பலரும் எவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டார்கள் என்று நான் நன்கு அறிந்து வைத்திருக்கிறேன்.

ஆனால் அமைச்சர் சஜித் பிரேமதாஸ போன்றவர்கள் அவ்வாறு அல்லர். எங்கள் அரசாங்கத்தில் இருக்கின்ற மிகவும் நியாயமான, மக்களின் நலன்கள் மீது அக்கறை கொண்டவர்தான் சஜித் பிரேமதாஸ. இதற்கு நல்ல உதாரணமாக, நாட்டின் ஏனைய பகுதிகளைப் போன்றே பொலன்னறுவையிலும் ஏழை எளிய மக்கள் நலன் கருதி வீடமைப்பு திட்டங்களை ஏற்படுத்திக்கொடுத்திருப்பதை குறிப்பிடலாம். அதேவேளை, ஏனைய அரசியல் தரப்பினர் தொடர்பாக கதைப்பதற்கு நிறையவே இருக்கின்றது. தற்போது அதற்கு நேரம்போதாது என்றார்.

மேலும், எனது ஆட்சி காலத்தில் ஜனநாயகத்திற்கும் மனிதவுரிமைகளுக்கு அதிகமாக இடமளித்துள்ளேன். அதேபோன்று எதிர்கால ஜனாதிபதி வேட்பாளர்களும் இதற்கு உறுதியளிக்க வேண்டும்” என தெரிவித்திருந்தமையும் குறிப்பிடதக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21