சிரேஷ்ட மாணவர்களால் புதிய மாணவர்களுக்கு ‘ராகிங்’ என்ற போர்வையில் எவ்வித பகிடிவதை அசம்பாவிதங்களும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பதிவாகவில்லை என உபவேந்தர் பேராசிரியர் உபுல் திசாநாயக்கா தெரிவித்தார்.

ஏனைய பல்கலைக் கழகங்களைப் பொறுத்தவரையிலும் சில ஊடகங்கள் குறிப்பிடும் விதத்தில் பாரிய அளவிலான பகிடிவதைத் தொல்லைகள் எதுவும் இடம்பெறவில்லை எனவும் புதிய மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டு சுமார் இரு மாதங்கள் கழிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.