கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்த பின்பே யாருக்கு ஆதரவு என்பதைப் பகிரங்கப்படுத்துவோம் - ஹக்கீம்

Published By: Daya

17 Aug, 2019 | 03:19 PM
image

(நா.தனுஜா)

அனைத்துக் கட்சிகளும் தமது ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்த பின்னரேயே யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்துப் பகிரங்கப்படுத்த முடியும். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரினதும் கொள்கைகள், எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் கட்சிக்குள் ஆராய வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கண்டியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு, ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தமது ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவைப் பெயரிட்டுள்ள நிலையில், மக்கள் விடுதலை முன்னணி இன்றைய தினம் தமது வேட்பாளரை அறிவிக்கவுள்ளது.

மேலும் தமது வேட்பாளராக யாரைக் களமிறக்குவது என்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளேயே சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதையடுத்து, ஏனைய கட்சிகளுடன் இணைந்து அமைக்கவுள்ள கூட்டணியின் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் அதே தினத்திலேயே ஜனாதிபதி வேட்பாளரும் தீர்மானிக்கப்படுவார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் கபீர் காசீம் தெரித்ள்ளார். 

இவ்வாறானதொரு நிலையில் சிறுபான்மையினக் கட்சிகள் யாருக்கு ஆதரவு வழங்கும் என்ற விடயம் முக்கியமானதாகப் பார்க்கப்பட்டு வருகின்றது. அனைத்துக் கட்சிகளும் தமது ஜனாதிபதி வேட்பாளர்களை அறிவித்த பின்னர், அவர்களின் கொள்கை மற்றும் தேர்தல் விஞ்ஞாபனம் உள்ளிட்டவற்றைக் கருத்திற்கொண்டு யாருக்கு ஆதரவு வழங்குவதென்பதைத் தீர்மானிப்போம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. 

தற்போது முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை ஒத்த கருத்தையே வெளியிட்டிருக்கிறது. 'அனைத்துக் கட்சிகளும் தமது ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்த பின்னரேயே யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்துப் பகிரங்கப்படுத்த முடியும். அத்தோடு போட்டியிடும் வேட்பாளர்களின் கொள்கைகள், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கட்சிக்குள் ஆராய வேண்டிய தேவையும் இருக்கிறது' என அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31