பட்லர் விளாச வென்றது மும்பை

Published By: Raam

12 May, 2016 | 11:09 AM
image

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடை­பெற்ற 41ஆவது லீக் போட்­டியில் விராட் கோஹ்லி தலை­மை­யி­லான பெங்­களூர் அணியை, ரோஹித் ஷர்­மாவின் மும்பை அணி வெற்­றி­கொண்­டது. இந்தப் போட்­டியின் இறு­தியில் அதி­ரடி காட்­டிய பட்லர் 29 ஓட்­டங்­களை விளாச மும்பை அணி 6 விக்­கெட்­டுக்­களால் வெற்­றி­யீட்­டி­யது.

இந்தப் போட்­டியில் நாணய சுழற்­சியில் வெற்­றி­பெற்ற மும்பை இந்­தியன்ஸ் அணி, முதலில் துடுப்­பெ­டுத்­தாட பெங்­களூர் அணியை பணித்­தது. அதன்­படி முதலில் கள­மி­றங்­கிய பெங்­களூர் அணி நிர்­ண­யிக்­கப்­பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்­கெட்­டுக்­களை இழந்து 151 ஓட்­டங்­களைக் குவித்­தது.

பெங்­களூர் அணியின் ஆரம்பத் துடுப்­பாட்ட வீரர்­க­ளாக விராட் கோஹ்லி மற்றும் அதி­ரடி ஆட்­டக்­காரர் கிறிஸ் கெய்ல் ஆகியோர் கள­மி­றங்­கினர். இந்த ஜோடி ரசி­கர்­க­ளுக்கு அதி­ரடி விருந்து படைக்கும் என்று பெரிதும் எதிர்­பார்க்­கப்­பட்ட நிலையில் கோஹ்லி 7 ஓட்­டங்­க­ளு­டனும் கிறிஸ் கெய்ல் 5 ஓட்­டங்­க­ளுடனும் ஆட்­ட­மி­ழந்து ஏமாற்­றினர்.

அதன்­பி­றகு ஜோடி சேர்ந்த மற்­றொரு அதி­ரடி ஆட்­டக்­கா­ர­ரான டிவில்­லியர்ஸ் மற்றும் ராகுல் ஜோடி அணியின் ஓட்ட எண்­ணிக்­கையை உயர்த்­தி­யது. இதில் சற்று நிதானம் கலந்த அதி­ர­டியை காட்டிய டிவில்­லி­யர்­ஸ் 24 ஓட்­டங்­க­ளுடன் வெளி­யேற, அடுத்து களம் கண்டார் வொட்சன். இவரும் 15 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழக்க மறு­மு­னையில் அதி­ர­டி­யாக ஆடிக்­கொண்­டி­ருந்த ராகு­லுடன் ஜோடி சேர்ந்தார் பேபி. இந்த ஜோடி அதி­ர­டி­யாக ஆடி ஓட்­டங்­களைக் குவித்தது.

இதில் ராகுல் 68 ஓட்­டங்­களைக் குவித்தார். இதில் 4 சிக்­ஸர்கள் மற்றும் 3 பவுண்­ட­ரிகள் அடங்கும். மறு­மு­னையில் பேபி 25 ஓட்­டங்­களை எடுக்க பெங்­களூர் அணி 151 என்ற ஓட்ட எண்­ணிக்­கையை எட்­டி­யது.

152 ஓட்­டங்கள் பெற்றால் வெற்றி என்ற நிலையில் கள­மி­றங்­கிய மும்பை இந்­தியன்ஸ் அணி 18.4 ஓவர்­களில் 4 விக்­கெட்­டுக்­களை மாத்­திரம் இழந்து 153 ஓட்­டங்­களைப் பெற்று 6 விக்­கெட்­டுக்­களால் வெற்­றி­பெற்­றது.

இதில் ரோஹித் ஷர்மா(25), பட்டேல்(1), ராயுடு(44), ரானா(9) ஓட்டங்கள் வீதம் பெற்றனர். இறுதிவரை களத்தில் நின்ற பொலார்ட் (35) மற்றும் பட்லர் (29) ஜோடியின் அதிரடி ஆட்டம் மும்பை அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09