வெரிகோஸ் வெயின் என்ற பாதிப்பிற்குரிய சிகிச்சை

Published By: Daya

17 Aug, 2019 | 10:35 AM
image

அதிக நேரம் நின்று கொண்டோ அல்லது அதிக நேரம் அமர்ந்திருந்தோபணியாற்றுபவர்களுக்கு நாளடைவில் வெரிகோஸ் வெயின் என்கிற பாதிப்பு ஏற்படலாம்  என வைத்தியர்  சண்முக வேலாயுதம் தெரிவித்துள்ளார். 

நீண்ட நேரம் அமர்ந்து இருந்ததாலும், நீண்ட நேரம் நின்று கொண்டிருப்பதாலும் கால்கள் மற்றும் பாதங்களில் இயல்பாக நடைபெறவேண்டிய இரத்தவோட்டத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. அத்துடன் கால்பகுதியிலிருந்து இதயம் நோக்கி செல்லும் அசுத்த இரத்தம் இரத்தகுழாய்களில் தேக்கமடையத் தொடங்குகின்றன. 

இதன் காரணமாக இரத்த அழுத்தத்தில் சமச்சீரற்றத்தன்மை உருவாகிறது.  இந்நிலையில் கால்களில் இருந்து இதயம் நோக்கி செல்ல வேண்டிய அசுத்த இரத்தம் உள்ள நிணநீரானது இரத்த குழாய்களில் இருந்து கசிந்து, அல்லது கசிவு ஏற்பட்டு அருகில் உள்ள திசுக்களுக்கு பரவத் தொடங்குகிறது. 

இதனால் கால்களில் வீக்கம் ஏற்பட தொடங்குகிறது. இதனை கவனியாது விட்டால், ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் சிதைவுற்று, அதிலுள்ள இரும்பு சத்துகள் அருகில் உள்ள திசுக்களுக்கும் பரவுகின்றன. இதனால் அங்கு கருமை நிறம் தோன்றுகிறது. அதனைத் தொடர்ந்து அப்பகுதியிலுள்ள தோல்களில் அரிப்பு ஏற்படுகிறது. 

அரிப்புக்கு நிவாரணம் தேடாமல், நாம் உடனடியாக அந்த பகுதியை கைகளால் நீவி விடாமல், நகங்களைக் கொண்டு சொரிந்து கொள்வதால் அப்பகுதியில் உள்ள தோல்கள் மூலம் இரத்தம் வெளியேறுகிறது. நாளடைவில் வெரிகோஸிஸ் வெயின் என்ற பாதிப்பு தீவிரமடைகிறது.

இரண்டு வகையினதான வெரிகோஸ் வெயின் பாதிப்பு ஏற்படுகிறது. இதன்போது வைத்தியர்கள் ஹேண்ட் டாப்ளர் என்ற கருவியின் மூலம் பாதிப்பினை உறுதிப்படுத்திக் கொள்வார்கள்.

 இதில் முதலாவது வகையினதான வெரிகோஸ் வெயின் பாதிப்பிற்கு சிகிச்சைகள் 2 அல்லது 3 அமர்வுகளில் எடுத்துக் கொண்டால் போதுமானது. முழுமையாக நிவாரணம் கிடைத்துவிடும். இரண்டாவது வகையினதான வெரிக்கோசில் பாதிப்பிற்கு கட்டாயம் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். தொடர் சிகிச்சை, மருத்துவரின் கண்காணிப்பு மற்றும் அவர் சொல்லும் பரிந்துரையை உறுதியாக பின்பற்ற வேண்டும்.

இரண்டாவது வகையினதான வெரிக்கோசில் பாதிப்பிற்கு ஏழு வகையான நிலைகள் இருக்கிறது. இதில் மூன்றாவது நிலைக்கு மேல் உள்ளவர்களுக்கு சத்திரசிகிச்சை தேவைப்படும். ஆறாம் நிலையில் உள்ளவர்களுக்கு முழுமையாக பாதிக்கப்பட்டுள்ள நரம்பினை ரேடியோ ப்ரீகுவன்ஸி அப்ளேசன்  தெரபி என்ற சத்திர சிகிச்சை மூலம் பாதிக்கப்பட்ட நரம்பினை முழுமையாக அகற்றி, குணமளிப்பார்கள். அத்துடன் நிவாரணமாக காலுறையை அணிந்துகொள்ள பரிந்துரைப்பார்கள். 

அத்துடன் உறங்கும் பொழுது காலை சற்று உயரத்தில் இருக்கும் வகையில் உறங்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்வார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29