ஜம்புலிங்கம் 3 டி படத்தில் நூற்றுக்கு மேற்பட்ட ஜப்பானிய நடிகர்கள்.!

Published By: Robert

12 May, 2016 | 11:07 AM
image

பல நூற்றாண்டுகளாக இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் கலாசார தொடர்ப்பு இருந்துக் கொண்டு இருக்கிறது. பல்வேறு  பரிமாணங்களை தாண்டி இன்று அந்தத் தொடர்ப்பு சினிமா மூலம் தொடர்கிறது. 

சூப்பர் ஸ்டார் நடித்த முத்து இங்கு மாபெரும் வெற்றி, ஜப்பான் ரசிகர்களுக்கு தமிழ் படங்கள் மீது உள்ள ஆர்வத்தை தூண்டி வருகிறது. அம்புலி 3டி படத்தை இயக்கிய ஹரீஷ் நாராயாணன்- ஹரி ஷங்கர் இரட்டையர் இயக்கி, எம்.எஸ்.ஜி மூவீஸ் மற்றும் சங்கர் டிசழவாநசள தயாரிப்பில், எம்.பி.எல் கடைஅள  சார்பில் பி.எல்.பாபு நாளை வெளியிட இருக்கும் 'ஜம்பு லிங்கம் 3 டி' படம்  இந்திய ஜப்பான் உறவை மீண்டும் மேற்படுத்துகிறது.

அம்புலி 3டி, ஆ ஆகியப் படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து ஹரி  - ஹரீஷ் இரட்டை இயக்குனர்கள் இயக்கும் 'ஜம்புலிங்கம் 3டி' படத்தில் 100க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நடித்து உள்ளனர். தயாரிப்பாளர் ஹரி ஜப்பான் கலாசார மையத்தின் தலைவராக இருப்பதாலோ என்னவோ இந்தப் படத்தில் பங்கேற்க, ஜப்பானிய கலைஞர்களின் ஆர்வம் மிக அதிகமாக இருந்தது. ஆர்வம் ஒரு பக்கம் இருப்பினும், அவர்களுடன் எங்களது சம்பாஷனைகள் பெரும் பாலும் ஊமை மொழியில் தான் இருந்தது. அதை படமாக்கி இருந்தாலே, அதுவே ஒருப் பெரிய நகைச்சுவை படமாக இருந்து இருக்கும். 

இந்தப் படத்தின் கதை ஒரு இந்திய கிராமத்தில் ஆரம்பித்து ஜப்பானில் சென்று முடிகிறது. நமது ஊரில் குழந்தைகளுகான  படங்களே வெளி வருவது இல்லை என்றக் குறையை ஜம்புலிங்கம் 3 டி தீர்க்கும். 

இந்தப் படத்தை திரையிட  திரை அரங்கு உரிமையாளர்கள் இடையே இருக்கும் ஆர்வம், இந்தக் கோடைக் காலத்தில் குழந்தைகளுக்கு நல்ல பொழுதுப்போக்கை தர வேண்டும் என்ற அவர்களது எண்ணத்தையும் காட்டுகிறது. 3 டி தொழில் நுட்பம் இருக்கிறது என்று எல்லா கதைக்கும் பயன்படுத்த முடியாது. அதற்கேற்ற கதை வேண்டும், ஜம்புலிங்கம் 3 டி படத்தில் அதற்கு தேவையான அத்தனை அம்சங்களும் அதிக பெற்று இருக்கிறது' என்று நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.

தகவல் : சென்னை அலுவலகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37