சுற்றுலாவில் காத்திருந்த அதிர்ச்சி: ஓநாயின் தாக்குதலுக்குள்ளான குடும்பம்

Published By: Digital Desk 3

16 Aug, 2019 | 04:35 PM
image

கனடாவிற்கு சுற்றுலா மேற்கொண்ட அமெரிக்காவின் நிவ் ஜெர்சியைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட குடும்பத்தினர் ஓநாயின் தாக்குதலுக்குள்ளாகி உயிர்தப்பிய சம்பவம்  ஒன்று இடம்பெற்றுள்ளது. 

கடந்த வெள்ளிக்கிழமை கனடாவில் ஆல்பர்ட்டாவில் உள்ள பான்ஃப் தேசிய பூங்காவில்  இந்த ஓநாயின் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அந்நாட்டின் நேரப்படி அதிகாலை ஒரு மணியளவில், கூடாரதத்தின் உள்ளே  குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருந்த போது, எதிர்பாராத நேரத்தில் கூடாரத்தை கிழித்து கொண்டு  ஓநாய் ஒன்று வந்து தாக்கியுள்ளது.

தந்தை மத்தேயுவை மனைவி மற்றும் அவருடைய இரண்டு பிள்ளைகளின் முன்னால் ஓநாய் தூக்கி எறிந்துள்ளது.

இது பற்றி தாய், எலிசா, பேஸ்புக்கில் தெரிவிக்கையில்,

மத்தேயு "ஓநாயை தரையில் புறட்டிபோட்டு, அதன் தாடையை தனது கைகளால் பிளந்தார்" . ஆனால் ஓநாய் மத்தேயுவின் கையைப் பற்றிக் கொண்டு அவரை இழுத்துச் செல்லத் தொடங்கியது, "நான் இழுத்து அவரைத் திரும்பப் பெற முயற்சித்தேன் ”.

அவர் சண்டையிட்டு எங்களை காப்பாற்ற முயற்சிக்கையில் நாங்கள் உதவிக்காக கத்தினோம், ஒரு நித்தியம் போல் உணர்ந்தோம்".

பக்கத்து கூடாரத்தில் இருந்த நபர் எங்கள் குடும்பத்தின் அலறல்களைக் கேட்டு, விரைந்து வந்தார்.. "பின் இடுப்பு பகுதியில்" ஓநாயை உதைத்தார், இதனால் ஓநாய் மத்தேயுவை விட்டுவிட்டு கூடாரத்திலிருந்து வெளியேறியது.

அங்கிருந்த ஆண்கள் அலறிக் கொண்டு ஓநாய் மீது கற்களை எறிந்தனர்.

மத்தேயுவை மீட்டு வைத்தியசாலையில்  அனுமதித்து காயங்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

"நான் மிகவும் மோசமாக இருந்திருக்கலாம், நாங்கள் எல்லோரும் ஒரு முழுமையான குடும்பமாக இங்கே அமர்ந்திருக்கிறோம் என்பதற்கு நாங்கள் மிகவும் நன்றியை தெரிவிக்கிறோம்," என்று அவர் எழுதியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34