எனக்கு வாக்­க­ளித்தால் உங்­க­ளுக்­காக என் உயி­ரையும் கொடுப்பேன் என்று நடி­கரும் அ.தி.மு.க. வேட்­பா­ள­ரு­மான கருணாஸ் தெரி­வித்­துள்ளார். திரு­வா­ட­னையில் பிர­சாரம் மேற்­கொண்ட அவர் இது தொடர்பில் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது, நான் சென்­னை­வா­சிதான். ஆனால் எனக்கு வாக்­க­ளித்தால் நான் ஒரு வேலைக்­கா­ர­னாக இருந்து திரு­வா­டனை தொகு­திக்கு பணி­களை செய்வேன், நடிப்பு என்­பது எனது தொழில். நான் ஒரு சிறிய சாதா­ரண நடிகன். எனக்கு எந்த பின்­ன­ணியும் இல்லை. எனது தந்தை சாலை ஓரத்தில் டீ கடை வைத்­தி­ருந்­தவர்.

உங்­க­ளுக்கு சேவை செய்ய புரட்சி தலைவி அம்மா எனக்கு வாய்ப்பு கொடுத்­துள்ளார். அவ­ருக்கு நன்­றிகள். நான் சென்னை வாசி­யாக இருந்தால் என்ன. சட்­ட­மன்ற உறுப்­பினர் என்­பது ஒரு தொழில். எனக்கும் சம்­பளம் கொடுக்­கப்­படும். உங்­க­ளுக்­காக சேவை செய்யும் எனது தொழிலை நான் உண்­மை­யாக செய்வேன். நான் எங்கு இருந்­தாலும் உண்­மை­யாக இருப்பேன் எனக்கு வாக்களித்தால் இறுதிவரையில் என் உயிரையும் கொடுப்பேன் என்றார்.