குடிபோதையில் தன்னிலை மறந்து, தண்டவாளத்தில் தலைசாய்ந்த இளைஞன்: உடல் கருகி மரக்கட்டையான சோகம்

Published By: J.G.Stephan

15 Aug, 2019 | 04:16 PM
image

லண்டனில், விம்பிள்டன் ரயில் நிலையத்தில் குடிபோதையில் தண்டவாளத்தில் படுத்து உறங்கிய இளைஞர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடிபோதையில் நிதானம் இல்லாமல் ரயில் நிலையத்திற்குள் வந்த இளைஞர், 8 மற்றும் 9 நடைமேடைகளுக்கு இடையிலான தண்டவாளத்தில் சாவகாசமாக படுத்து உறங்கியுள்ளார்.

இதைக்கண்ட நடைமேடை பாதுகாவலர்கள், இளைஞரை எழுப்பி கண்டித்துள்ளனர். போதையில் எழுந்து நிற்க முடியாமல் திணறிய இளைஞர் நகர முடியாமல், மீண்டும் கீழே விழுந்துள்ளார்.

கீழே விழுந்த இளைஞர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. பின்னர், இளைஞனின் உடல் கருகி புகை வந்துள்ளது. தகவல் அறிந்த சம்பவயிடத்திற்கு மருத்துவ உதவிக்குழுவினர் மற்றும் போக்குவரத்து பொலிசார் விரைந்துள்ளனர்.

அங்கு மரக்கட்டை போல்  கருகிக் கிடந்த, இளைஞரின் மரணம் சந்தேகத்திற்குரியதாக கருதப்படவில்லை என குறிப்பிட்ட பொலிஸ் அதிகாரிகள், அவரை அடையாளம் கண்டு அவர்களின் உறவினர்களுக்கு தெரிவிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வழங்கியுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17