பிலிப்­பைன்ஸில் உள்ள இலங்­கைக்­கான தூத­ர­கத்­தினால் வெளிநாட்­டு­ அ­மைச்சின் கொன்­சி­யூலர் பிரி­வுக்கு, நேச­துரை ரெஜினோல்ட் சேவியர் என்­பவர் மர­ண­ம­டைந்­துள்­ள­தா­க­ அ­றி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

அவர் டுபாய் நாட்டில் பொறி­யி­ய­லா­ள­ராக கட­மை­யாற்­றி­யுள்­ள­தோடு கடந்த 10 வரு­டங்­க­ளாக பிலிப்­பைன்ஸில் வாழ்ந்து வந்­துள்ளார். அவரின் பிறந்த திகதி 1958.12.09 ஆகவும் பிறந்த இடம் வெள்ளவத்தை எனவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அவ­ருக்கு சஞ்ஜீவ் சேவியர் எனும் பெய­ரு­டைய மக­னொ­ருவர் இருந்­த­தா­கவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

நேச­துரை ரெஜினோல்ட் சேவியர் என்­ப­வரின் உற­வி­னர்கள் எவ­ரேனும் இருப்பின் அல்­லது உற­வி­னர்கள் தொடர்­பான ஏதேனும் தக­வல்கள் தெரிந்­த­வர்கள் இருப்பின் கொழும்பு 01, சேர்.பாரோன் ஜய­தி­லக்­க மா­வத்­தையில் அமைந்­துள்ள வெளிநாட்டு அலு­வல்கள் அமைச்சின் கொன்­சி­யூலர் பிரி­வுக்கு உட­ன­டி­யாக வருகைதரவும். 

அல்லது 011-2437635, 011-5668634 என்ற தொலைபேசி எண்களுக்கு தொடர்புகொள்ளவும்.