ஒரே நாடு, ஒரே அரசியல் சட்டம் என்ற கனவு நனவாகியது - மோடி

Published By: Priyatharshan

15 Aug, 2019 | 03:28 PM
image

காஸ்மீருக்கு வழங்கப்பட்ட விசேட அதிகாரத்தை இரத்துச்செய்ததன் மூலம் ஒரே நாடு ஒரே அரசியல் சட்டம் என்னும் கனவு நனவாகியதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்திய மக்கள்தொகை ஆரோக்கியமானதாகவும் அறிவுபூர்வமானதாகவும் இருக்கும்பட்சத்தில், தேசமும் ஆரோக்கியமாகவும் அறிவார்ந்ததுமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

இந்தியாவின் 73 ஆவது சுதந்திர தின விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

டெல்லி, செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றிய பின்னர் பிரதமர் மோடி, நாட்டு மக்களிடையே உரையாற்றினார். 

அவர் மேலும் அங்கு பேசுகையில், 

சமூகத்தின் ஒரு சிறிய பிரிவு, தங்களின் குடும்பங்களை சிறியதாகக் கட்டமைத்துக் கொள்கிறது. இதன் மூலம் சமூகத்தில் மரியாதையையும் அடைகிறது.

 நாட்டின் மக்கள்தொகைப் பெருக்கம் வருங்காலத் தலைமுறையினருக்கு புதிய சவால்களை உருவாக்கும். இந்தப் பிரச்சினையைத் தீர்க்க மத்திய மற்றும் மாநில அரசுகள் கொள்கைகளை உருவாக்கி, நடைமுறைப்படுத்த வேண்டும்.

இந்தியாவில் தொடர்ந்து மக்கள்தொகை அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்துகிறது. சமூகத்தின் ஒரு சிறிய பிரிவு, தங்களின் குடும்பங்களை சிறியதாகக் கட்டமைத்துக் கொள்கிறது. இதன்மூலம் சமூகத்தில் மரியாதையையும் அடைகிறது. அவர்களின் செயல் தேசப்பற்று மிகுந்தது.

இந்திய மக்கள்தொகை ஆரோக்கியமானதாகவும் அறிவுபூர்வமானதாகவும் இருக்கும்பட்சத்தில், தேசமும் ஆரோக்கியமாகவும் அறிவார்ந்தும் இருக்கும்.

தண்ணீரின் அவசியத்தை உணர்த்தி பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நீரின்றி அமையாது உலகு என திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார்.

முன்னேற்றத்தை அடைய வேண்டுமென்றால் வறுமை ஒழிக்கப்பட வேண்டும். வறுமையில் உள்ளவர்கள் சவால்களை சமாளிக்கும் வழிகளை அறிந்தவர்கள்.

இன்றளவும் தண்ணீர் வசதி இல்லாத வீடுகள் உள்ளன, நீண்ட தூரம் நடந்து சென்று தண்ணீர் கொண்டுவரும் நிலைதான் உள்ளது. நாட்டு மக்கள் அனைவரது வீடுகளிலிலும் தண்ணீர் கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டது தான் ஜல் ஜீவன் மிஷன். 

பல ஆண்டுகளுக்கு முன் ஜெயின் முனிவர் தண்ணீர் விற்பனை செய்யப்படும் என்றார், அவரின் வாக்கு இப்போது பலித்துக் கொண்டு இருக்கிறது என குறிப்பிட்டார்.

மேலும், தண்ணீரின் முக்கியத்துவத்தை குறித்து விளக்கி பேசியபோது, நீரின்றி அமையாது உலகு என தமிழில் பேசினார் பிரதமர் மோடி. 

இந்நிலையில், பா.ஜ.க.வைச் சேர்ந்த பல அதிகாரிகள் சனத்தொகைப் பெருக்கம் குறித்து ஏற்கெனவே குரல் எழுப்பியுள்ள போதிலும், இதுகுறித்து மோடி பேசுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52