வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு  பாரிய நிதி ஒதுக்கீடு ; ரிஷாட்

Published By: Digital Desk 4

15 Aug, 2019 | 02:54 PM
image

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்காக இந்த அரசாங்கம் பாரிய நிதியை ஒதுக்கி உள்ளதாக அமைச்சர்  ரிஷாட் பதியுதீன்  தெரிவித்தார்.

வவுனியா பொது வைத்தியசாலையில்  நேற்று இடம்பெற்ற கட்டிட திறப்பு விழா நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்ட போதே அமைச்சர் உரையாற்றினார்.

 இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கௌரவ  அதிதியாக ராஜித சேனாரத்தினவும் கலந்துகொண்டனர்.  இதன் போது அமைச்சர் ரிஷாட் மேலும் கூறியதாவது, 

வடக்கிலே இந்த நான்கு வருட காலத்தில் பிரதமரின் கீழான  அமைச்சில் இருந்து ஒதுக்கப்பட்ட நிதியினால் பாரிய அபிவிருத்தி பணிகள் இடம்பெற்றுள்ளன அது மாத்திரமன்றி மக்களின் நலனுக்காக சுகாதாரம், கல்வி, வீடமைப்பு, மற்றும் இன்னோரன்ன துறைகளில் இந்த அரசாங்கம் நிதியை ஒதுக்கி அபிவிருத்தியை மேற்கொண்டு வருகிறது. மாணவர்களின் கல்வி தேவைக்காக கட்டப்பட்டுள்ள பாடசாலை கட்டிடங்கள் பல விரைவில் திறப்பற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

வடக்கின் சுகாதார துறையை மேம்படுத்துவதற்காக  அமைச்சர் ராஜித, இந்த பகுதிக்கு அடிக்கடி விஜயம் செய்கிறார். இதுவரை இருந்த சுகாதார அமைச்சர்களில் வடக்குக்கு ஆக கூடிய தடவை விஜயம் செய்த அமைச்சராக ராஜித விளங்குகிறார். வடக்கின் அபிவிருத்தியில் கரிசனை காட்டும் பிரதமருக்கும் அமைச்சர் ராஜிதவுக்கும் எனது நன்றிகளை தெரிவிக்கின்றேன், என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38