கிளிநொச்சியில் படையினரால் 23 ஏக்கர் காணி விடுவிப்பு

Published By: Digital Desk 4

15 Aug, 2019 | 12:55 PM
image

கிளிநொச்சி மாவட்டத்தில் படையினரால் 23 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆவணங்கள் இன்று ஒப்பமிட்டு கையளிக்கும் நிகழ்வு இன்று காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. 

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கிருஷ்ணபுரம் பகுதியில் படையினரின் பயன்பாட்டில் இருந்த காணிகளே இவ்வாறு கையளிக்கப்பட்டுன. இதற்கான ஆவணங்கள் இன்று கிளிநொச்சி மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் ஒப்பமிட்டு கையளிக்கப்பட்டன. 

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் கிளிநொச்சி இராணுவ தலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ரவிப்பிரியவால் இதற்கான ஆவணங்கள் இன்று கையளிக்கப்பட்டது.

காணி விடுவிப்பு தொடர்பில் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ரவிப்பிரிய ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில்,

இன்று படையினர் வசமிருந்த 23 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்துள்ளதாகவும். இதேவேளை மெலும் காணிகள் விடுவிப்பதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றை விடுவிப்பது தொடர்பிலான முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும். தனியார் காணிகள் இவ்வாறு விரைவாக விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடு்கப்பட்டு வருவதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

குறித்த காணி விடுவிப்பு தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் ஆரமைநாயகம் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில்,

இன்று படையினரால் கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் 23 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான ஆவணங்களை இன்று தம்மிடம் கையளித்துள்ளதாகவும், குறித்த விடுவிக்கப்பட்ட காணிகள் தொடர்பில் மக்கள் தமது என அடையாளப்படுத்தும் வகையில் ஆவணங்களை சமர்ப்பித்துள்ளதாகவும், குறித்த ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டு கரைச்சி பிரதேச செயலகம் ஊடாக கையளிப்பதற்கான நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09