“கன­டா­வுக்கு  உல­க­ளா­விய ரீதி­யி­லுள்ள  ஆற்­றல்­ மிக்க தொழி­லா­ளர்­களை  கவர்ந்­தி­ழுக்க வேண்­டிய தேவை­யுள்­ளது”

Published By: Digital Desk 3

15 Aug, 2019 | 01:14 PM
image

உல­க­ளா­விய ரீதி­யி­லுள்ள ஆற்­றல்­மிக்க தொழி­லா­ளர்­களை விரை­வாக கவர்ந்­தி­ழுக்க வேண்­டிய தேவை கன­டா­வுக்கு உள்­ள­தாக அந்­நாட்டு குடி­வ­ரவு, அக­திகள் மற்றும் பிர­ஜா­வு­ரிமை விவ­கார  அமைச்சர் அஹமெட்  ஹுஸன் நேற்று முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை தெரி­வித்­துள்ளார்.

கன­டாவின் பொரு­ளா­தார குடி­வ­ரவு முறை­மை­யா­னது உலகில் மிகவும் வெற்­றி­க­ர­மான ஒன்­றாகத் திகழ்­வ­தாகக்  குறிப்­பிட்­டுள்ள  அந்­நாட்டு பொரு­ளா­தார கூட்­டு­றவு மற்றும் அபி­வி­ருத்தி நிறு­வ­னத்தின் புதிய அறிக்­கைக்கு அவர் வர­வேற்பு தெரி­வித்தார்.

அந்த அறிக்கை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக நேற்று முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழ­மையே வெளியி­டப்­பட்­டுள்­ளது.

கனடா ஏற்­க­னவே பல­வற்றில்  சரி­யா­ன­வற்றை மேற்­கொண்டு வரு­கின்ற  போதும் எதிர்­கால சவால்­களை எதிர்­கொள்ள மேலும் பல­வற்றைச் செய்­ய ­வேண்­டி­யுள்­ள­தாக அஹமெட்  ஹுஸன் தெரி­வித்தார்.

குடி­வ­ரவு என்று வரும் போது அதனை கேள்வி கேட்­காது இருக்க முடி­யாது  என அவர் சி.பி.சி. ஊட­கத்­துக்கு அளித்த பேட்­டியில் வலி­யு­றுத்­தினார்.

"சிறந்த குடி­வ­ரவு கொள்­கையைப் பேணு­வ­தற்கு   குடி­வ­ரவு முறை­மையை தொடர்ந்து விருத்­தி­ செய்ய ஏனை­ய­வர்­க­ளி­ட­மி­ருந்து கற்றுக் கொள்ள  எப்­போதும் தயா­ராக இருக்க வேண்­டி­யுள்­ளது" என அவர் கூறினார்.

சில கருத்துக் கணிப்பு வாக்­கெ­டுப்­புகள்  பெரும்­பான்­மை­யான கனே­டி­யர்கள்  வரு­டாந்தம் தமது நாட்டால் ஏற்­றுக்­கொள்ளப்படும் குடி­யேற்­ற­வா­சி­களின் தொகையை மட்­டுப்­ப­டுத்த விருப்பம் கொண்­டுள்­ள­தாக தெரி­விக்­கின்­றன.

இந்­நி­லையில் அஹமெட்  ஹுஸன்  கூறு­கையில்,  நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை ஊக்­கு­விக்க தொழில் வெற்­றி­டங்­க­ளுக்கு தகை­மை­யுள்ள பணி­யா­ளர்­களைக் கொண்டு வரு­வ­தற்கு ஆத­ர­வ­ளிப்­ப­தாகக் குறிப்­பிட்டார்.

''இது தொடர்பில் தவறு மேற்­கொள்­ளப்­படக் கூடாது.   நாம் கன­டா­வுக்கு வெளியி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளால பாதிப்பை எதிர்­கொள்­ளலாம் என்ற  தவ­றான தக­வலும் அச்­சமும் பரப்­பப்­பட்­டுள்ள நிலையில் அவற்றை முறி­ய­டிக்க மேலும் செய­லாற்ற வேண்­டி­யுள்­ளது'' என  அவர் கூறினார்.

இந்­நி­லையில் எதிர்­வரும் ஒக்­டோபர் மாதம் நடை­பெ­ற­வுள்ள கனே­டிய பொதுத் தேர்­தலில் எல்­லையைக் கடந்து வரும் புக­லி­டக்­கோ­ரிக்­கை­யா­ளர்­களை அர­சாங்கம் கையாளும் விதத்தை உள்­ள­டக்கி குடி­யேற்­ற­வா­சிகள் தொடர்­பான  விவாதம் முக்­கிய வகி­பா­கத்தை வகிக்கும்  என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

கன­டாவின் சனத்­தொகை வளர்ச்­சியில்  80 சத­வீதம் குடி­யேற்றம் கார­ண­மாக ஏற்­பட்­டுள்­ள­தாகத் தெரி­வித்த அஹமெட்  ஹுஸன், அந்­நாட்டில் 1971ஆம் ஆண்டில்  ஒவ்­வொரு ஓய்­வு ­பெற்­ற­வ­ருக்கும் 7 பேர்  என்ற வீதத்தில்  தொழில்­ பு­ரி­ப­வர்கள் காணப்­பட்­ட­தா­கவும்  இந்தத் தொகை 2035ஆம் ஆண்டுக்குள் ஓய்வுபெற்றவர் ஒருவருக்கு இரு தொழில் புரிபவர்கள் என மாறும் நிலை தோன்றியுள்ளதாகவும் எச்சரித்துள்ளார். 

''எமது வயதாகும் சனத்தொகைக்கு ஏற்ப எமது குடிவரவு முறைமையில் நாம் தொடர்ந்து கவனம் செலுதத்துவதை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது" என அஹமெட்  ஹுஸன் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04