தேசிய அர­சாங்­கத்தின் வரவு–செலவுத் திட்டத்தின் மூல­மாக பரிந்­து­ரை­செய்­யப்­பட்ட தோட்டத் தொழி­லா­ளர்­களின் 2500 ரூபா சம்­ பள உயர்­வுக்கு தோட்ட நிர்­வா­கங்கள் மறுப்புத் தெரி­வித்­துள்ள நிலையில் இன்­றைய தினம் பிர­தமர் தலை­மையில் சம்­பள விடயம் தொடர்பில் விசேட கலந்­து­ரை­யாடல் ஒன்றை நடத்த வுள்­ள­தாக தொழில் மற்றும் தொழில் உற­வுகள் அமைச்சர் ஜோன் சென­வி­ரட்ன தெரி­வித்தார்.

சம்­பள உயர்வு விடயம் தொடர்பில் இரண்டு வரு­டங்­க­ளுக்கு ஒருமுறை கூட்டு ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திடும் அனைத்து தொழிற்­சங்­கங்­களும் இதில் கலந்து கொள்­ள­வுள்­ள­தா­கவும் அர­சாங்­கத்­தினால் பரிந்­துரை செய்­யப்­பட்ட சம்­பள அதி­க­ரிப்பு தொகை­யினை வழங்­காத நிறு­வ­னங்­க­ளுக்கு எதி­ராக சட்­ட­ந­ட­வ­டிக்கை எடுக்­கப்­படும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

தேசிய அர­சாங்­கத்தின் பரிந்­து­ரையின் கீழ் மே மாதம் முதல் பெருந்­தோட்ட தொழி­லா­ளர்­க­ளுக்கு 2500 ரூபா சம்­பள அதி­க­ரிப்­பா­னது வழங்­கப்­படும் என அர­சாங்­கத்­தினால் தெரி­விக்­கப்­பட்­டது. இருந்­த­போ­திலும் தொழி­லா­ளர்­களின் இம்­மாத சம்­பள சீட்டில் குறித்த தொகை­யா­னது உள்­ள­டக்­கப்­ப­டாமை தொடர்பில் வின­விய போதே தொழில் மற்றும் தொழில் உற­வுகள் அமைச்சர் ஜோன் சென­வி­ரட்ன மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் தொடர்ந்து கருத்து தெரி­விக்­கையில்.

பெருந்­தோட்ட தொழி­லா­ளர்­களின் சம்­பளம் உட்­பட நலன்­புரி விட­யங்கள் தொடர்பில் இரண்டு வரு­டங்­க­ளுக்கு ஒரு­முறை கைச்­சாத்­தி­டப்­படும் கூட்டு ஒப்­பந்­த­மா­னது காலா­வ­தி­யாகி

ஒரு வரு­ட­மா­கியும் பெருந்­தோட்ட கம்­ப­னிகள், கூட்டு ஒப்­பந்­தத்தில் சைச்­சாத்­திடும் தொழிற்­சங்­களின் மாறுப்­பட்ட கருத்­துக்கள் உட்­பட சில பிரச்­சி­னை­க­ளினால் கைச்­சாத்­தி­டு­வது இழு­ப­றி­நி­லையில் காணப்­ப­டு­கின்­றது.

இந்­த­நி­லையில் தேசிய அர­சாங்­கத்தின் கடந்த வர­வு­செ­ல­வுத்­திட்­டத்தின் ஊடாக அர­சாங்கம் தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு மே மாதம் முதல் 2500 ரூபா சம்­பள அதி­க­ரிப்­பினை வழங்­கு­வ­தற்கு பரிந்­துரை செய்­தது. இருந்த போதிலும் இச்­சம்­பள அதி­க­ரிப்­பி­னையும் தோட்ட கம்­ப­னிகள் வழங்­கு­வ­தற்கு மறுப்­பினை தெரி­வித்­துள்­ளன. இத­னி­டையே அர­சினால் பரிந்­துரை செய்­யப்­பட்ட இந்த சம்­பள அதி­க­ரிப்பு தொகை­யினை கட்­டா­ய­மாக தோட்ட கம்­ப­னிகள் வழங்க வேண்டும் இதனை வழங்க மறுக்கும் கம்­ப­னி­க­ளுக்கு எதி­ராக சட்­ட­ந­ட­வ­டிக்கை எடுக்க பின்­வாங்க போவ­தில்லை.

இவ்­வா­றான நிலையில் தோட்ட தொழி­லா­ளர்­களின் சம்­பளம் உட்­பட நலன் புரி விடயம் தொடர்பில் கைச்­சாத்­தி­டப்­படும் கூட்டு ஒப்­பந்­த­மா­னது தொடர்ச்­சி­யாக இழு­ப­றி­நி­லையில் காணப்­ப­டு­கின்­ற­மை­யினால் இதற்கு தீர்வு ஒன்­றினை பெற்று கொள்ளும் முக­மாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் உயர்­மட்­டக்­கு­ழு­வினர் கலந்­து­கொள்ளும் விசேட கூட்டம் இன்­றைய தினம் இடம்­பெ­ற­வுள்­ளது. இக்­க­லந்­து­ரை­யா­டலில் கலந்­து­கொள்­ளு­மா­று­கூட்டு ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திடும் அனைத்து தொழிற்­சங்­கங்­களும் அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது. அந்­த­வ­கையில் சம்­பளம் விடயம் தொடர்பில் தீர்­வொன்றை முன்­வைக்க இன்­றைய தினம் எதிர்ப்­பார்க்­கின்றோம் என்றார்.

தொழி­லா­ளர்கள் ஏமாற்றம்

அர­சாங்­கத்­தினால் பரிந்­துரை செய்­யப்­பட்ட சம்­பள அதி­க­ரிப்பு தொகை­யான 2500 ரூபா இம்­மாதம் சம்­பள சீட்டில் உள்­ள­டக்­கப்­படும் எனும் எதிர்­பார்ப்பில் இருந்து தோட்ட தொழி­லா­ளர்கள் ஏமாற்றம் அடைந்­துள்­ளனர். இவ்­வா­றான நிலையில் தொழி­லா­ளர்கள் பெருந்­தோட்­டங்­களை பிர­தி­நித்­து­வப்­ப­டுத்தும் அர­சியல் பிர­தி­நி­தி­களின் மீது விச­னங்­களை தெரி­விப்­ப­தேர்டு ஆர்ப்­பாட்­டங்­களில் ஈடு­பட போவ­தா­கவும் குறிப்­பிட்­டுள்­ளனர்.

தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­ப­ளத்­தையும் அவர்­க­ளது நலன்­புரி விடயங்களையும் தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தம் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த வருடம் மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ள நிலையில் அதனை புதுப்பித்துக்கொள்வது தொடர்பில் கடந்த ஆறுகட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிவடைந்துள்ள நிலையிலேயே இன்றைய தினம் பிரதமர் தலைமையில் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை முன்னெடுக்கபடுவது குறிப்பிடத்தக்கது