இரண்டு நாள் உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்டு பிரித்­தா­னி­யா­வுக்குச் சென்­றுள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இன்று காலை அந்­நாட்டு பிர­தமர் டேவிட் கெம­ரூனை சந்­தித்துக் கலந்­து­ரை­யா­ட­வுள்ளார். அத்­துடன் ஊழல் ஒழிப்பு தொடர்பில் உலக நாடு­களின் தலை­வர்கள் பங்­கு­பற்றும் சர்­வ­தேச மாநாட்டில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சிறப்­பு­ரை­யாற்­ற­வுள்ளார்.

ஊழல் ஒழிப்பு தொடர்பில் உலக நாடு­களின் தலை­வர்கள் கலந்து கொள்ளும் சர்­வ­தேச மாநாடு லண்­டனில் இன்று இடம்­பெ­ற­வுள்­ளது. இதில் கலந்து கொள்­வ­தற்­காக உலக நாடு­களின் தலை­வர்கள் மற்றும் சிவில் சமூ­கத்­தினர் என பலரும் கலந்துக் கொண்­டுள்­ளனர்.

ஊழல் ஒழிப்பில் ஒத்­து­ழைப்­புடன் செயற்­ப­டவும் பொது­வான பிரச்­ச­னை­களின் போது சகோ­த­ரத்­து­வத்­துடன் நேச நாடு­க­ளுக்கு ஒத்­து­ழைப்­பு­களை வழங்­கவும் இந்த மாநாட்டின் போது இணக்­கப்­பா­டுகள் ஏற்­ப­டுத்திக் கொள்ளவுள்ளதாக பிரித்தானிய பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.