அ.தி.மு.க., தி.மு.க.விட­மி­ருந்து விடு­தலை வாங்­கித்­தர வந்­துள்ளேன்

Published By: Raam

12 May, 2016 | 08:31 AM
image

அ.தி.மு.க., தி.மு.க.விட­மி­ருந்து விடு­தலை வாங்­கித்­த­ரவே தமி­ழகம் வந்­துள்ளேன் என்று பிர­தமர் நரேந்­திர மோடி தெரி­வித்­துள்ளார். சட்­ட­சபை தேர்­தலை முன்­னிட்டு, பா.ஜ.க. வேட்­பா­ளர்­களை ஆத­ரித்து நாகை மாவட்டம் வேதா­ரண்யம் அருகே நேற்று நடை­பெற்ற பா.ஜ.க. பிர­சார பொதுக்­கூட்­டத்தில் பிர­தமர் நரேந்­திர மோடி உரை­யாற்­றிய போது, இலங்­கையில் தூக்குத்தண்­டனை விதிக்­கப்­பட்ட 5 தமி­ழர்­களை எனது அரசு காப்­பாற்­றி­யது. மர­ண­தண்­டனை இரத்து மட்­டும்­போ­தாது விடு­தலை செய்ய இலங்­கையை வலி­யு­றுத்­தினேன். இந்­தி­யாவின் நெருக்­குதலால்தான் இலங்கை அரசு 5 மீன­வர்­க­ளையும் விடு­தலை செய்­தது தூக்குத்தண்­ட­னைக்­குள்­ளான தமி­ழக மீன­வர்­களின். அப்பா, அம்மா ஸ்தானத்தில் இருந்து அவர்களைமீட்டேன் மத்­திய அரசு தமி­ழக மக்­களின் சுக, துக்­கங்­களில் பங்­கெ­டுத்­துள்­ளது நீங்கள் சந்­தோ­ஷ­மாக இருந்­தால்தான் என்னால் மகிழ்ச்­சி­யாக இருக்க முடியும். இலங்­கையால் விடு­தலை செய்­யப்­பட்ட 5 மீன­வர்­களை பார்க்­கும்­போது உள்ளம் நெகிழ்­கி­றது. மேலும், தேசம் விடு­தலை பெற்ற பிறகு வேதா­ரண்யம் வந்த முதல் பிர­தமர் நான்தான் தி.மு.க, -அ.தி.மு.க. கட்­சி­க­ளி­ட­மி­ருந்து தமி­ழக மக்­க­ளுக்கு விடு­தலை வாங்­கித்­தர வந்­துள்ளேன். பா.ஜ.க. ஆளும் மாநி­லங்­க­ளி­லுள்ள அர­சு­களின் ஒரே மந்­திரம் வளர்ச்சி என்­பது மட்­டுமே.

நான் உங்­க­ளிடம் ஒரு கேள்வி கேட்க விரும்­பு­கிறேன். சொல்­வீர்­களா?கல்வி கூடம், அலு­வ­லகம், வீடு எதி­லா­வது 24 மணி­நே­ர­மா­வது மின்­சாரம் வரு­கி­றதா. பா.ஜ.க. ஆளும் மாநி­லங்­களில் 24 மணி நேரமும் மின்­சாரம் வந்து கொண்­டுள்­ளது. சுதந்­திரம் பெற்று இத்­தனை வரு­டங்கள் ஆகிய பிறகும் சுத்­த­மான குடிநீர் கிடைக்­க­வில்லை. சுத்­த­மான குடிநீர் உங்­க­ளுக்கு கிடைக்க வேண்­டுமா என்­பதை நீங்­களே தீர்­மா­னி­யுங்கள்.

உங்கள் வளர்ச்­சிக்­கா­கத்தான் உங்­க­ளிடம் வாக்கு கேட்டு வந்­துள்ளேன். மீன­வர்கள் பொரு­ளா­தார ரீதியில் கஷ்­டப்­பட்­டுக்­கொண்­டுள்­ளார்கள் என்­பதை அறிவேன். எனது வார­ணாசி தொகு­தியில் மீன­வர்­க­ளுக்கு -ப­டகு திட்டம் கொண்­டு­வந்தேன் சூரிய ஒளி மூலம் அந்த பட­குகள் இயங்­கு­வதால் நாளுக்கு 500 ரூபா மிச்­ச­மா­கி­றது.

தமி­ழ­கத்தை சேர்ந்த பாதி­ரியார் பிரேம்­குமார் ஆப்­கா­னிஸ்­தானில் தீவி­ர­வா­தி­களால் கடத்­தப்­பட்டார். தலி­பான்­களால் கடத்­தப்­பட்ட யாருமே இது­வரை உயி­ரோடு வந்­தது கிடை­யாது. 9 மாதங்­க­ளாக தொடர்ந்து முயற்சி செய்து பத்­தி­ர­மாக மீட்டோம்.

காங்கிரஸ் தலை­மை­யி­லான ஐக்­கிய முற்­போக்கு அரசில் தினமும் ஒரு ஊழல் நடந்­தது. 2ஜி, 3ஜி என அனைத்­திலும் முந்தைய அரசு ஊழல் செய்தது. 2ஜியில் கொள்ளையடித்தவர்கள் தமிழகத்தில் இன்னும் வலம் வருகிறார்கள். ஊழல் இருக்கும்வரை தமிழகம் வளராது. ஊழல் இல்லாத அரசாங்கத்தை தமிழகத்தில் ஏற்படுத்த வேண்டும். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டுமானால் தாமரைக்கு வாக்களியுங்கள். தமிழகம் தலை நிமிர வேண்டுமானால் தாமரை சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52