நீர்­கொ­ழும்பு புனித செபஸ்­தியார் சிலை மீது கல்­வீச்சு ; இது­வரை எவரும் கைது செய்­யப்­ப­ட­வில்லை

Published By: Vishnu

14 Aug, 2019 | 10:39 AM
image

நீர்­கொ­ழும்பு மீரி­கம பிர­தான வீதியில் கட்­டு­வ­ப்பிட்­டிய பிர­தே­சத்தில் அமைக்­கப்­பட்­டி­ருந்த புனித செபஸ்­தியார் சிலை மீது கடந்த 6 ஆம் திகதி  விஷ­மி­களால் மேற்­கொள்­ளப்­பட்ட கல்­வீச்சுத் தாக்­குதல் தொடர்­பாக கட்­டானை பொலி­ஸா­ரால் 20க்கு மேற்­பட்டோர் விசா­ரணை செய்­யப்­பட்­டுள்­ளனர்.  சம்­பவம் தொடர்­பாக இது­வரை எவரும் கைது செய்­யப்­ப­ட­வில்லை என பொலிஸார் தெரி­விக்­கின்­றனர் 

கல்­வீச்சு கார­ண­மாக செபஸ்­தியார் சுரூபம் வைக்­கப்­பட்­டி­ருந்த கண்­ணாடிப் பேழைக்கு சிறிது சேதம் ஏற்­பட்­டது. சம்­ப­வத்தை அடுத்து 6ஆம் திகதி பிர­தே­ச­ வா­சிகள் பிர­தான வீதியில் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர். 

இதனை அடுத்து அங்கு வருகை தந்த கர்­தினால் மல்கம் ரஞ்சித் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டோரை கட்­டு­வ­பிட்­டிய தேவா­ல­யத்­துக்கு அழைத்து கலந்­து­ரை­யாடி அனை­வரும் அமை­தி­யாகச் செயற்­பட வேண்டும் என்றும், சம்­பவம் தொடர்­பாக உயர் மட்­டத்தின் கவ­னத்துக்கு கொண்டு வரு­வ­தா­கவும்  உறுதி வழங்­கினார். இதனை அடுத்து பிர­தே­சத்தில் அமைதி நில­வி­யது.

 இந்தக் குண்டுத் தாக்­கு­தலின் பின்­ன­ணியில் இருப்­ப­வர்கள் யார்? ஏன் இதனை மேற்­கொண்­டார்கள்?, ஏன் எமது மக்­களின் வாழ்க்­கையை நாச­மாக்­கி­னார்கள்? போன்ற கேள்­வி­களை  அர­சியல் தலை­வர்­க­ளிடம் மீண்டும் மீண்டும் நாம் கேட்­கிறோம்.  நாங்கள் மிகவும் அவ­தா­ன­மாக நடந்­து­கொள்ள வேண்டும். காரணம் இது­ போன்ற சம்­ப­வங்­களின் பின்­ன­ணியில் யார் உள்­ளார்கள் என்­பது எமக்குத் தெரி­யாது  என்று கர்­தினால் பிர­தே­ச­வா­சிகள் முன்­னி­லையில் உரை­யாற்றும் போது கூறினார்.

இந்தச் சம்­பவம் தொடர்­பாக  கட்­டானை பொலிஸ் நிலைய  குற்ற விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி  பொலிஸ் பரி­சோ­தகர் சுதத் நிவுன் எல்ல தலை­மையில் விசா­ரணை மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கி­றது. பிர­தே­சத்திலுள்ள சிசி­ரிவி காட்­சி­க­ளையும் பொலிஸார் ஆராய்ந்­துள்­ளனர். ஆயினும் இது­வரை ஒரு­வரும் கைது செய்­யப்­ப­ட­வில்லை என குற்ற விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் சுதத் நிவுன் எல்ல தெரி­வித்தார். 

 இந்தச் சம்பவம் தொடர்பாக ஐந்து பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள தாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித் துள்ளார். தற்போது கட்டுவப்பிட்டிய பிரதே சம் உட்பட நீர்கொழும்பு  நகரில் அமைதி நிலவுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46