வேலையில்லா பட்டதாரிகள் கொழும்பில் ஆர்ப்பாட்டம் 

Published By: R. Kalaichelvan

13 Aug, 2019 | 06:25 PM
image

(ஆர்.விதுஷா)

பட்டதாரிகளுக்கான நியமனத்தின் போது அவர்கள் உள்வாரி வெளிவாரி என வேறுபடுத்தப் படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிணைந்த வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு பேரணி; இன்று இடம் பெற்றது.

இதன் போது சுமார் 100 இற்கும் அதிகமான வேலையில்லா பட்டதாரிகள் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக அணிதிரண்டிருந்தனர்.

 இவர்கள் பட்டதாரிகளுக்கான நியமனத்தின் போது அவர்கள் உள்வாரி வெளிவாரி என வேறுபடுத்தப் படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோஷங்களை எழுப்பினர்.

அதனை தொடர்ந்து வேலை வாய்ப்பை கொடுக்கும் போது  உள்வாரி பட்டதாரிகள்  , வெளிவாரி பட்டதாரிகள் என வேறுபடுத்த வேண்டாம் என்றும்,  அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழில் வாய்ப்புகளை பெற்றுதருமாறும்  கோரிக்கைகள் எழுதப்பட்ட பதாகைககளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியவாறும் பேரணியாக ஜனாதிபதி செயலகத்தை நோக்கி சென்றனர். 

இதன் போது லோட்டஸ் சுற்றுவட்ட பகுதியில் பொலிசார் குவிக்கப்பட்டதுடன் பாதுகாப்பு வேலிகளும் அமைக்கப்பட்டது. ஆகவே, ஆரம்ப்பாட்டகாரர்கள் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சிற்கு முன்பாக ஒன்று திரண்டு கோஷங்களை எழுப்பி தமது எதிர்ப்பை வெளியிட்டனர். அந்த பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55