பெண்கள் நலவாழ்வு செயற்றிட்டத்துக்கான திட்டவரைபு வெளியானது

Published By: Digital Desk 3

13 Aug, 2019 | 04:43 PM
image

சுகாதார அமைச்சு மற்றும் UNFPA இணைந்து இலங்கை பெண்கள் நலவாழ்வு செயற்றிட்டத்துக்கான திட்ட வரைபை இன்று (13.08.2019) வெளியிட்டுள்ளது.

கருப்பைக்கழுத்து புற்றுநோய் இலங்கை பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய் வகைகளில் மூன்றாவது பெரிய வகையாகும். இது இனவிருத்தி சுகாதாரம் குறித்த முக்கியமான ஒரு பிரச்சனையாகும். 2018ஆம் ஆண்டு மாத்திரம் 1,136 புதிய கருப்பைக் கழுத்து புற்று நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர். பாலியல் நடவடிக்கைகள் வழியாக கடத்தப்படும் தொற்றக்கூடிய ஹியூமன் பப்பிலாமோவைரஸ் (HPV) இதற்கான முக்கிய காரணமாகும்.

இலங்கை பெண்கள் நலவாழ்வு கிளினிக்குகளில் பரிசோதிக்கப்படும் நோய்களில் இதுவும் ஒன்றாகும். குருதியமுக்கம், போஷாக்கு, நீரிழிவு, மார்பகம் தொடர்பான பிரச்சனைகள், கருப்பை கழுத்து, குடும்பத்திட்டமிடல் நிலைமை, மாதவிடாய் பிரச்சனைகள், இனவிருத்தி கடத்தில் ஏற்படும் பிரச்சனைகள், மோனோபோஸ் தொடர்பான பிரச்சனைகள் ஆகியனவும் அச்சோதனையில் அடங்கும்.

தற்போது இலங்கை மற்றும் உலக நாடுகளில் வளங்களும் கவனமும் இரண்டாம் நிலை நோய்த்தடுப்பை விட குணமாக்கலையே நோக்கமாக கொண்டே உபயோகிக்கப்படுகின்றன. இந்த நிலைமையானது பெண்ணின் வாழ்க்கைத்தரத்தை அல்லது அவரின் இனவிருத்தி சுகாதாரத்தை பாதிக்கின்றன. ஆகவே பெண்களின் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதன் மூலம் இறப்பு வீதத்தை குறைக்க வேண்டியதே அவசியமானது.

இணைந்து செயலாற்ற வேண்டிய அவசியத்தை உணர்ந்து இலங்கை சுகாதார அமைச்சானது ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின்(UNFPA) ஆதரவுடன் இலங்கை பெண்கள் நலவாழ்வு தேசிய செயற்றிட்ட வரைபை(2019-2023) வெளியிட்டுள்ளது. இது 20130 ஆம் ஆண்டளவில் மிகவும் பின்தங்கியுள்ள பெண்கள் அடங்கலாக அனைத்து வயதுமட்ட பெண்களும் நாடு முழுதும் உள்ள பெண்கள் நலவாழ்வு கிளினிக்குகள் வழியாக தரமான சுகாதார சேவைகளை பெறுதலை உறுதிப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.

இந்த செயற்றிட்டம் கருப்பைக்கழுத்து புற்றுநோய்க்கெதிரான போராட்டத்தில் சரியான தருணத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. HPV தடுப்பூசி மூலம் இந்நோய் முதன்முறையாக ஏற்படுவதை தடுக்கவும் இரண்டாம் கட்ட நோய்த்தடுப்பானது HPV பரிசோதனைகள் மூலமும் முடியும்.

வெளியீட்டின் போது Dr. அனில் ஜெயசிங்க கருத்து தெரிவிக்கையில்,

சுகாதாரம், போஷாக்கு, சுதேச மருத்துவ அமைச்சின் சுகாதார சேவைகளுக்கான நிர்வாக இயக்குனர் தெரிவித்ததாவது, இந்த செயற்றிட்டத்தின் முக்கிய நோக்கம் கருப்பை கழுத்து பரிசோதனைகளில் இருந்து இப்புற்றுநோயை கண்டுபிடிப்பதில் வினைத்திறனான HPV பரிசோதனைக்கு நகர்தலே ஆகும்.2017இல் , நாம் 6 ஆம் தர சிறுமிகளுக்கு HPV தடுப்பூசி வழங்கினோம். HPV க்கான பரிசோதனைகள் கருப்பைக்கழுத்து புற்றுநோயை நாட்டில் இருந்தே ஒழிக்க உதவும்.” எனத் தெரிவித்தார்.

நிகழ்வில் அனைவருக்குமான சுகாதார சேவைகளின் கிடைப்பனவு குறித்துப்பேசிய UNFPA பிரதிநிதி திருமதி.ரிட்சு நக்கேன் தெரிவித்ததாவது “ தவிர்க்கப்படத்தக்க காரணங்களால் ஒரு பெண் மரணமடைந்தாலும் அது பெரிய பிரச்சனை என்று நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இது புதிய பெண்கள் நலவாழ்வு திட்டவரைபை ஏற்றுக்கொள்ள சரியான தருணமாகும். அதன் மூலம் பெண்களின் சுகாதார நிலையை மேம்படுத்த கட்டமைப்பு மற்றும் சேவைகளில் தேவையான மாறுதல்களை செய்ய முடியும். இது இலங்கையின் அனைத்து பெண்களும் தரமான சுகாதார சேவைகளை பெறுவதோடு தங்கள் முழுமையான உள்ளாற்றலை பூர்த்தி செய்ய உதவும் எனத் தெரிவித்தார்.

2018 இல் , UNFPA களுத்துறையில் HPV DNA பரிசோதனைகள் நடாத்தப்பட உதவியிருந்தது. ஐநா அமைப்பின் இனவிருத்தி சுகாதாரத்துக்கான அமைப்பாக இலங்கைப்பெண்களின் சுகாதாரம் மற்றும் நலவாழ்வை மேம்படுத்தும் பொருட்டு இப்பெண்கள் நலவாழ்வு செயற்றித்தத்துக்கு 1996 ஆம் ஆண்டு முதல் தனது ஆதரவை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29