விளையாட்டு வினையாகியதில் பரிதாபமாக பறிபோன சிறுவனின் உயிர்

Published By: Digital Desk 4

13 Aug, 2019 | 03:50 PM
image

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் சல்வார் தாவணியில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் கழுத்தில் தாவணி இறுகி 8 வயது சிறுவன் ஒருவர் இன்று மதியம் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, செடடிகுளம், முகத்தான்குளம் பகுதியில் உள்ள தனது வீட்டில் சகோதரனுடன் சல்வார் தாவணியில் யன்னல் ஊடாக கழுத்தில் கொழுவி விளையாடிக் கொண்டிருந்த போது குறித்த தாவணி இறுகியதில் 8 வயது சிறுவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

சல்வார் இறுகியதும் 5 வயது சகோதரன் கூச்சலிட்டு தனது மற்றைய சகோதரன் மற்றும் உறவினர்களின் உதவியுடன் சிறுவனை மீட்ட போதும் அது பயனளிக்கவில்லை. சிறுவன் குறித்த இடத்திலேயே மரணமடைந்தார். குறித்த சிறுவனின் சடலம் செட்டிகுளம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் சசிதரன் கிருசான் (வயது 8) என்ற சிறுவனே மரணமடைந்தவராவார். குறித்த சிறுவனின் தந்தையார் கொலைச் குற்றச்சாட்டு ஒன்று தொடர்பில் 2015 ஆம் ஆண்டு முதல் மரணதண்டனை கைதியாக கண்டி போகம்பர சிறைச்சாலையில் உள்ள நிலையில் சிறுவன் தனது தந்தையாரை இவ்வாறு தான் கொலை செய்வார்களா என கழுத்தில் இறுக்கி பல தடவை வினவியதுடன், தந்தையார் தொடர்பில்  மன அழுத்திற்கு உள்ளாகியிருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.  

இச்சம்பவம் தொடர்பில் செட்டிகுளம் பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33