எங்கள் இறப்பிற்கு அப்பாதான் காரணம் ; வட்ஸ் அப் மூலம் வெளிச்சத்துக்கு வந்த உண்மை

Published By: Digital Desk 4

13 Aug, 2019 | 01:30 PM
image

  இந்தியாவின் பெங்களூரைச் சேர்ந்த தாய் மற்றும் 2 மகள்கள் தற்கொலை செய்துக் கொண்டமைக்கான  காரணம் குறித்து மகள் ஒருவர், வட்ஸ் அப்பில் செய்தி ஒன்றை பதிவு செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இந்தியாவின் பெங்களூரைச் சேர்ந்தவர் சித்தையா(48). இவருக்கும் ராஜேஸ்வரி என்பவருக்கும் திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். இதில் மானசா(17) பன்னிரெண்டாம் வகுப்பும், பூமிகா(15) பத்தாம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

மானசா, நேற்று முந்தினம் வட்ஸ் அப்பில் செய்தி ஒன்றை தனது மாமா புட்டசாமிக்கு அனுப்பியுள்ளார். அதில், ‘அனைவருக்கும் நல்ல அப்பா கிடைக்க வேண்டும். அப்படி கிடைத்திருந்தால் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

ஆனால், என் அப்பா எங்கள் வாழ்க்கையை சீரழித்துவிட்டார். எங்கள் இறப்பிற்கு அவர்தான் காரணம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை படித்து முடித்த அடுத்த நொடியே அதிர்ச்சி அடைந்த அவர், ராஜேஸ்வரி வீட்டிற்கு கிளம்பினார்.

அங்கு வீடு உள்புறமாக தாழிட்டு இருந்துள்ளது. பின்னர் உடைத்துக் கொண்டு சென்றபோது, 3 பேரும் தூக்கில் தொங்கி கிடந்ததை கண்டு அலறினார். இதையடுத்து பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து. பொலிஸார் மூவரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இவர்கள் இறக்க காரணம் என்ன? என்பதை பொலிஸார்  விசாரிக்கையில், சித்தையாவுக்கு வேரொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததும், இதனால் அவர் குடும்பத்தை கண்டுக் கொள்ளாமல் இருந்ததும் தெரிய வந்துள்ளது. மேலும் இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே ராஜேஸ்வரி, இரு மகள்களுடன் தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17