சீனாவைத் தாக்கிய சூறாவளியில் பலியானோரின் எண்ணிக்கை உயர்வு

Published By: Digital Desk 3

13 Aug, 2019 | 12:59 PM
image

சீனாவை தாக்­கிய லெகிமா சூறா­வ­ளியில் சிக்கி பலி­யானோரின் எண்ணிக்கை 49 ஆக  அதிகரித்துள்ளது. அத்துடன் இது வரையில் 21 பேர் காணாமல் போயுள்ளார்கள்.

லெகிமா சூறா­வ­ளியானது மணிக்கு 190 கி.மீ. வேகத்தில் வீசியதுடன், பலத்த மழையும் பெய்தது. கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடல் கடும் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இந்த சூறாவளியால் ஏராளமான மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்தன. அதன்பின்னர் ஷாங்டாங், அன்ஹூய் ஆகிய மாகாணங்களையும் லெகிமா புயல் தாக்கியது. 

புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சனிக்கிழமையன்று புயல் மழை தொடர்பான விபத்துக்களில் சிக்கி உயிரிழந்த 13 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. மேலும் சிலரைத் தேடி வந்தனர்.

அதன்பின்னர் இரண்டு நாட்களாக நடந்த மீட்பு பணியின்போது மேலும் பலரது உடல்கள் மீட்கப்பட்டன. இன்று காலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 21 பேரைக் காணவில்லை. அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த இயற்கை பேரிடரால் பொருளாதார இழப்பு ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25