சிட்னியில் கத்திக்குத்து சம்பவங்களால் பெரும் பதற்றம்

Published By: Rajeeban

13 Aug, 2019 | 12:04 PM
image

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பொதுமக்கள் அதிகமாக நடமாடும் பகுதியில் பெண்ணொருவரை நபர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பிட்ட நபர் வேறு பலரையும் கத்தியால் குத்தியுள்ளார் என தகவல்கள் வெளியாகின்றன.

மற்றொரு பெண்ணின் சடலத்தை மீட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பாரிய கத்தியுடன் நபர் ஒருவரை கைதுசெய்துள்ள காவல்துறையினர் பாரிய  தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

காயமடைந்த பெண்ணை  அந்த பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்குள் வைத்து மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சந்தேகநபரை கைதுசெய்வதற்காக  பொதுமக்கள் கதிரைகள் உட்பட பல பொருட்களை பயன்படுத்துவதையும் பின்னர் காவல்துறையினர் அந்த நபரை கைதுசெய்வததையும் காண்பித்துள்ளன.

குறிப்பிட்ட பகுதியை தவிர்க்குமாறு காவல்துறையினர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

நான் வைன்யார்ட் பூங்கா பகுதியில் நடமாடிக்கொண்டிருந்த வேளை நீண்ட கத்தியுடன் நபர் ஒடினார் அவரை வேறு சிலர் துரத்திக்கொண்டு செல்வதை பார்த்தேன் என நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவரை துரத்தியவர்களின் கைகளில் தடிகள் பொல்லுகள்காணப்பட்டன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிட்ட நபர் பெண்ணொருவரை கத்தியால் குத்திவிட்டு வேறு பலரை கத்தியால் குத்த முயன்றார் பல குற்றங்கள் இடம்பெற்றுள்ளன என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47