கிளிநொச்சி விளையாட்டரங்கை இலவசமாக பயன்படுத்தலாம்  

Published By: Digital Desk 4

13 Aug, 2019 | 11:40 AM
image

 (எம்.எம்.சில்வெஸ்டர்)

கிளிநொச்சி மாவட்ட பாடசாலை மாணவ, மாணவிகள் தமது பயிற்சிகளுக்காக கிளிநொச்சி  விளையாட்டரங்கு மற்றும் நீச்சல் தடாகம் ஆகியவற்றை இலவசமாக பயன்படுத்த முடியும் என விளையாட்டத்துறை அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம் தம்மிக்க முத்துகல ‘வீரகேசரி இணையத்தளத்துக்கு’‘ தெரிவித்தார்.

இவ்விடயம் குறித்து அவர் மேலும் கூறுகையில்,

“விளையாட்டுத்துறை அமைச்சின் ஒதுக்கப்பட்ட நிதியின் 350 மில்லியன் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்ட கிளிநொச்சி விளையட்டரங்கு மற்றும் நீச்சல் தடாகம் ஆகியன அண்மையில் வலைப்பந்தாட்ட வீராங்கனையான தர்ஜினி சிவலிங்கத்தினால் திறந்து வைக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட மாணவ, மாணவிகளின் விளையாட்டு ஆற்றல்களை மேம்படுத்தும் நோக்கில் கட்டணம் ஏதுமின்றி இலவசமாக பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளோம்.  அவர்கள் தத்தமது பயிற்றுநர்களுடன் விளையாட்டரங்கிலும், நீச்சல் தடாகத்திலும் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரையிலான 12 மணித்தியால காலப்பகுதியில் அங்கு பயிற்சிகளை மேற்கொள்ள முடியும்” என்றார்.

இதேவேளை, விளையாட்டுத்துறை அமைச்சின் நிதியிலிருந்து வட மாகாணத்தின் மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களிலும் விளையாட்டரங்கு நிர்மானிப்புப் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருவதுடன், நாட்டின் ஏனைய மாவட்டங்களிலும் விளையாட்டரங்குகள் மற்றும்  நீச்சல் தடாகங்களை நிர்மானிக்கப்பட்டு வருவதாகவும் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22
news-image

ஐ.பி.எல் 2024 : பஞ்சாப் கிங்ஸை...

2024-03-26 00:02:20