கனடாவிலிருந்து வந்தோரின் வீட்டில் 15 பவுன் நகை, 10 இலட்சம் பணம் கொள்ளை

Published By: Digital Desk 4

13 Aug, 2019 | 11:17 AM
image

தென்மராட்சி எழுதுமட்டுவாழ் பகுதியில்  உள்ள வீடொன்றுக்கு முகங்களை மறைத்தவாறு நுழைந்த கொள்ளையர்கள் வீட்டிலிருந்தவர்களைத் தாக்கிவிட்டு கனடாவிலிருந்து வந்திருந்த பெண் ஒருவரின் 35 பவுண் நகைகள், 10 இலட்சம் ரூபா பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையிட்டுள்ளனர்.

 கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரினால் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

கனடாவிலிருந்து வந்த பெண் ஞாயிற்றுக்கிழமை இரவு எழதுமட்டுவாழில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ளார்

அன்றிரவு இரவு முகங்களை துணியால் மறைத்து வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்து கொள்ளையர்கள் வீட்டில் இருந்த முதியவர்களை கடுமையாக தாக்கிவிட்டு நகை, பணம் என்பவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரில் உள்ள ஆலயம் ஒன்றின் கட்டுமானப்பணி வேலைகளுக்காக கனடா நாட்டிலிருந்து அனுப்பப்பட்ட 10 இலட்சம் ரூபா பணத்தை நேற்று முன்தினம் வவுனியா சென்று பெற்றுள்ளார். இதனை அறிந்தவர்களே இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53