மஹிந்த விரைவில் கைதாவார் : வெளிநாடுகளில் பணத்தை பதுக்கி வைத்துள்ளார் : அரசாங்கம் 

Published By: MD.Lucias

11 May, 2016 | 06:42 PM
image

(ப.பன்னீர்செல்வம்)

மஹிந்த ராஜபக்ஷ ஊழல், மோசடி, திருட்டு என கறைபடிந்த சரிதை  கொண்டவர். எனவே அவர் தன்னை கறைபடியாத தலைவர் எனக் கூற முடியாது. சதாம்  ஹுசைன், கடாபி, ஹொஸ்னி முபாரக் போன்ற தலைவர்களும் பல கோடி ரூபாய்களை   பதுக்கி வைத்து இன்று வரை  அவை கண்டுபிடிக்கப்படவில்லை. இதுபோன்றே இலங்கையின் சட்டங்களில் சிக்கிக் கொள்ளாத வண்ணம்   மிகவும்  சூட்சுமமாக மஹிந்த ராஜபக்ஷ   நாட்டிலிருந்து பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ளார் என அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

மஹிந்த  ராஜபக்ஷவும்  அவரது மோசடிக்கார கும்பலும்  சட்டத்திலிருந்து  தப்பிக்க இடமளிக்கமாட்டோம். விரைவில் இவர்கள் கைதாவார்கள். மேலும் இந்த மோசடிக் காரர்களை  பாதுகாக்க  அமைச்சரவைக்குள்ளும் சில  புள்ளுருவிகள் இருப்பதாகவும் அரசாங்கம் சந்தேகம் வெளியிட்டது.  

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவைத்  தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலே அமைச்சரவை  பேச்சாளரும், சுகாதார  அமைச்சருமான  டாக்டர் ராஜித  சேனாரத்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷ வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள பணத்தை கண்டுபிடிப்பதற்கு  புதிய   திட்டங்கள் உருவாக்கப்படும். வெளிநாடுகளுடன் இணைந்து  விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். 

அதற்கான பல நடைமுறைகள்  உள்ளன. எனவே  விசாரணைகள்  முழுமை பெற காலதாமதமாகும். ஆனால்  மஹிந்த  ராஜபக் ஷ தனது  மோசடிகளிலிருந்து தப்பிக்கவே முடியாது. 

 விரைவில் விசாரணைகள்  முடிவடையும்.  மோசடிக்காரர்கள் கண்டுபிடிக்கப்படுவார்கள். மஹிந்த  உட்பட அவரது சகாக்கள் கைது செய்யப்படுவார்கள். 

 யார் என்ன  முயற்சி செய்தாலும் மஹிந்த சட்டத்திலிருந்து  தப்பிக்க முடியாது. இது தொடர்பில் மக்கள் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2024-04-18 15:29:41
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05