பாராளுமன்ற தெரிவுக்குழு விசாரணை : ஜனாதிபதி ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும் அழைப்பு 

Published By: Digital Desk 3

13 Aug, 2019 | 10:50 AM
image

(நா.தனுஜா)

உயிர்த்த ஞாயி­று­தின பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்கள் தொடர்­பான விசா­ர­ணை­களை முன்­னெ­டுப்­ப­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் உறுப்­பி­னர்­களை விசா­ர­ணைக்கு அழைப்­ப­தற்கு பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு முடிவு செய்­துள்­ளது. அதற்­கி­ணங்க அவர்­க­ளுக்கு அழைப்­புக்­க­டி­தங்கள் அனுப்­பி­ வைக்கப்­பட்­டுள்­ளன.

உயிர்த்த ஞாயி­று­தின பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்கள் தொடர்பில் பாரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழு­வினால் விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட்­டு­வரும் நிலையில், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உள்­ள­டங்­க­லாக நாட்டின் தேசிய பாது­காப்­புடன் தொடர்­பு­டைய மற்றும் பொறுப்­புக்­கூற வேண்­டிய நிலை­யி­லுள்ள பலரும் அதன் முன்­நி­லையில் ஆஜ­ராகி சாட்­சியம் வழங்­கி­யி­ருந்­தனர்.

தாக்­கு­தல்கள் குறித்த தெரி­வுக்­கு­ழுவின் விசா­ர­ணைகள் இறு­திக்­கட்­டத்தை நெருங்­கி­யுள்ள நிலையில், இவ்­வாரம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கு தெரி­வுக்­குழு முன் ஆஜ­ரா­கு­மாறு அழைப்பு விடுப்­ப­தற்கு எதிர்­பார்க்­கப்­பட்­டுள்­ளது. அத்­தோடு உயிர்த்த ஞாயி­று­தின தாக்­கு­தல்கள் தொடர்பில் ஆராய்­வ­தற்­காக ஜனா­தி­ப­தி­யினால் நிய­மிக்­கப்­பட்ட மூவர்­கொண்ட ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் உறுப்­பி­னர்­க­ளுக்கும் அழைப்­புக்­க­டிதம் அனுப்­பி­வைக்கப்­பட்­டுள்­ளது.

ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவை நெறிப்­ப­டுத்­திய உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ரசர் விஜித மலல்­கொட மற்றும் அதன் உறுப்­பி­னர்­க­ளான முன்னாள் பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்­ககோன், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் செய­லாளர் பத்­ம­சிறி ஜய­மான்ன ஆகிய மூவ­ருக்­குமே இவ்­வாறு விசா­ர­ணை­க­ளுக்­காக அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும் கர்­தினால்  மல்கம் ரஞ்சித் ஆண்­ட­கைக்கு அழைப்பு விடுக்­கப்­ப­டலாம் எனக்­கூ­றப்­பட்டு வந்த நிலையில், அத்­த­கைய திட்­டங்கள் எவையும் தெரி­வுக்­கு­ழு­விடம் இல்லை என்று பெயர் குறிப்­பிட விரும்­பாத தெரி­வுக்­குழு உறுப்­பினர்  ஒருவர் குறிப்­பிட்டார். 

அதே­போன்று தாக்­கு­தல்கள் நடை­பெற்ற பின்னர் 'அது­கு­றித்து முன்­னரே அறிந்­தி­ருந்­தார்­களா' என்ற சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்தும் வகையில் கருத்­துக்­களை வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜப­க் ஷ மற்றும் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ போன்றோரிடம் விசாரணைகள் முன்னெடுக் 
கப்படுமா என்று அவரிடம் வினவியபோது, அழைப்பதற்கு எதிர்பார்த்துள்ள நபர்களின் பட்டியலில் அவர்கள் இல்லை என்று பதிலளித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19